பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பயிற்சி முறைகள் தொடர்ந்தன, அதாவது வாழ்க்கையின் கடமைகளைச் செய்கிறபோதே, தேகத்திற்குத் திறம் கூட்டுகின்ற உடற்பயிற்சிகளாக இருந்தன என்பதுதான் வேதகால வாழ்க்கைக் கலாச்சாரமாக இருந்தது. வடமொழிப் புலவர் வால்மீகி அவ்வாறு வடித்திருந்த கவிதையைப் போல, தென்புலக் கவிஞர், திருமிகு சித்தர் திருமூலரும் உடலைப் பற்றி, ஒப்பற்ற முறையில் கவிதைப் பாடிக் காட்டியுள்ளார். உடம்பால் அழியில் உயிரால் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்! உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே அதற்கும் மேலாக அவர் எழுதியுள்ள வரிகள் உடம்பின் உள்ளே உத்தமன் குடி கொண்டான் என உடலினை யானிருந்து ஓம்புகின்றேனே! உடல் முக்கியம். அதற்கு உடற் பயிற்சிகள் மிகவும் முக்கியம். வலிமையான உடல் மூலமே வலிமையான மனதைப் பெற முடியும், அதன் வழியே தான் விழுமிய பக்தி உணர்வை வளர்த்து, ஒழுக்க வாழ்க்கை வாழ்ந்து, உயர்வான சிந்தனைகளுடன், சிறப்படைய முடியும் என்பதாக அன்றைய இந்தியர்களின் வாழ்க் கையெல்லாம் அருள்மயமாய் விளங்கியது. - - இந்தியர்களின் சமூக அமைப்பு (Social Life) ஒன்றாக உலவி வந்த மனித இனம், அவரவருக்குரிய கடமையை ஆற்றி வரும் பொழுதே, அணி அணியாகப் பிரிந்து