பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இராமன், இலக்குவன், இராவணன், மேகநாதன் போன்ற வீரர்கள் இராமாயணத்திலும்; அர்ஜுனன், பீமன், கிருஷ்ணன், பலராமன், பீஷ்மர், துரோணர் போன்றவர்களை மகாபாரதத்திலும் நாம் அறிந்து மகிழ்கிறோம். - வில்வித்தையில் அர்ஜுனன்; மல்யுத்தத்தில் பீமன்: கோடரிச்சண்டையில் இராவணன்: தட்டெறிதலில் கிருஷ்ணன், அஸ்திரங்களை வீசுவதில் மேகநாதன். இவர்கள் போர்க்கலையில் பிறர் வெல்ல முடியாத அளவுக்கு, சிறப்பான போராயுதங்களைப் பயன்படுத்திப் பெருமை பெற்றவர்கள் ஆவார்கள். அக்கால மக்களைப் பற்றியும், அவர்களது கல்விமுறை பற்றியும் அறிந்து கொள்ள, வேறெந்த விவரக் குறிப்புக்களும் இல்லை, இதிகாசங்களைத் தவிர. உடற்பயிற்சிக் கல்வியை, போர்ப்பயிற்சிக் கலையைக் கற்றுத்தர, தனியாக உடற்கல்வி ஆசிரியர்கள் யாரும் அக்காலத்தில் இருக்கவில்லை. வேதங்களைக் கற்பித்த வித்தகர்களே, வியூகங்கள் அமைத்துப் போரிடும் பேராற்றல் மிக்கப் பயிற்சிகளையும் கற்றுத் தந்தனர். அவர்களை குரு என்று அழைத்தனர். அவர்கள் வசித்துக் கற்றுத்தந்த இல்லமே குருகுலம் என்று (பள்ளி) அழைக்கப்பட்டது. இந்த குருகுலத்திற்கு வந்துதான். அரச பரம்பரைக் குழந்தைகள் கல்வி பயின்றனர். 25 வயது வரையில் அந்த மாணவர்களது குருகுல வாசம் நீடித்தது. அதற்குள்ளாக, உடற்பயிற்சி முறைகள், ஆயுதங்களைப் பயன்படுத்தும் நெறிமுறைகள், ஆன்மீக வளர்ச்சிபெறும் அறிவார்ந்த வழிகள் இவற்றில் பயிற்சி பெற்றன்ர். ■ கதாட்டம் (Gambling) பொகமக்களக்கப் பெக