பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 257 நிறுவப்பட்டது. இது ஒரு மிகப் பெரிய யோகா ஆராய்ச்சி நிறுவனமாக நிலவி பணியாற்றுகிறது. 4. GavaSq Hgy6v637ó (Yoga institute) பம்பாயில் சாந்தாகுரூஸ் எனும் இடத்தில், சுவாமி சிவானந்தா என்பவரால் இந்த யோகா நிறுவனம் நிறுவப் பெற்றது. பெங்களுரில் சுந்தரம் என்பவரும், சென்னையில் V.N. குமாரசுவாமி என்பவரும் யோகாசனம் பற்றி ஆய்வு செய்து, புத்தகங்கள் பலவற்றையும் எழுதி, இந்திய உடற்கலையின் ஏற்றத்தை உலகுக்கு உணர்த்தினர். மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்னும் லட்சியத்துடன், பல விளையாட்டுத்துறை இலக்கிய நூல்களை எழுதித் தயாரித்து வெளியிட்ட மேதைகள் பலர் உண்டு. அவர்களில் பூனாவைச் சேர்ந்த திரு. அன்னாசாகிப் போபத்கர் என்பவர் ஒருவர். இவர் இந்திய உடற்கல்வி பற்றி நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். இந்திய விளையாட்டுத்துறை கலைக் களஞ்சியம் எனும் நூலைத் தெளிவாக எழுதித் தொகுத்து, ஆங்கிலத்தில் வெளியிட்டு, ஒரு எழுச்சியை உண்டு பண்ணியவர் பூரீமான் ஆபாசாகிப் முகம்தார் என்பவர். -* இன்னும் பல அமைப்புக்களும் இங்கே தோன்றி நம் பயிற்சிகளான தண்டால், பஸ்கிகள், யோகாசனப் பயிற்சிகள், விறுவிறுப்பான கிராமப்புற நடனங்கள், சிலம்பச்சண்டைகள். உதவி சாதனங்களுடன் உடற் பயிற்சிகள், இந்திய விளையாட்டுக்களான கோகோ அட்யாபட்யா, கபடி போன்றவற்றை மேன்மைப்படுத்தி, மக்களிடையேயும்