பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மாணவர்களிடையேயும் பரப்பிட பல்வேறு வழிகளிலும் பாடுபட்டன. o ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விக் கல்லூரி பள்ளிகளில் உடற் கல்வி, உடற்பயிற்சி என்றால், அவற்றைக் கற்றுத் தர நியமிக்கப்பட்டவர்கள் யாவரும் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற சிப்பாய்கள் தாம், பள்ளிகளில் உடற்பயிற்சி அளிப்பவர்களாகப் பணியமர்த்தப் பட்டனர். அவர்களின் பயிற்சி முறைகள் எல்லாமே இராணுவ (மிலிடிரி) பயிற்சிகளாகவே இருந்தன. அவர்கள் நோக்க மெல்லாம், அதிகாரிகள் பள்ளிக்கு ஆய்வுக்காக வரும்போது, மாணவர்களைக் கூட்டுப் பயிற்சிகள் செய்து காட்டி மகிழ்விக்கும் வகையில் தான் அமைந்திருந்தன. இந்தியாவில் விஞ்ஞான பூர்வமான உடற்கல்வியின் வளர்ச்சி, சென்னையில் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்விக் கல்லூரி ஆரம்பித்த பின்னர் தான் நிறைவாக முன்னேற்றம் பெற்றது. இக்கல்லூரியை 1920ம் ஆண்டு ஆரம்பித்தவர் திரு. ஹேரி குரோபக் எனும் அமெரிக்கர் ஆவார், அவரது அயராத உழைப்பும் தெளிவான தீர்க்கத் தரிசனமுமே, இந்திய உடற்கல்வியை இந்த அளவுக்கு உயர்த்தி ஒளிவிட்டுப் பிரகாசிக்கச் செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து 1931ம் ஆண்டு ஹைதராபாத்தில் ஒரு அரசு உடற்கல்விக் கல்லூரி, 1932ம் ஆண்டு லக்னோவில் கிறிஸ்டியன் உடற்கல்விக் கல்லூரி என்று கல்லூரிகள் பல தொடங்கப்பெற்றன. + இவ்வாறு இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், முன்னேற்றப்