பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 டாக்டர். எஸ். நவராஜ செல்லையா _. == o --- -------------_ 13. கல்லூரிகளில், பள்ளி நிறுவனங்களில் உள்ள ஆடுகளங்கள், ஓடுகளங்கள், அவற்றில் உள்ளதற்கால நிலை யாவற்றையும் ஆய்வுக் குழு பரிந்துரையின் படி சேகரித்து உதவிடும் செயற்கரிய பணிகளிலும், மத்திய அரசு கல்வித் துறை முனைந்து செயல்பட்டது. 14. 1957ம் ஆண்டு, மக்களின் உடல்திறனை அறிந்து கொள்ள தேசிய உடல் திறத் தேர்வு (National Physical Efficiency Drive) எனும் சோதனைப் போட்டிகளை நடத்தியது. ஒரு நட்சத்திரப் பதக்கம் (One Star 2 நட்சத்திரப் பதக்கம் (2 Stars) மூன்று நட்சத்திரப் பதக்கம் (3 Stars) என்று மூன்று தேர்வுநிலைகளை வைத்து, அதற்குரிய அளவு கோலாக பல உயர்நிலை அளவுகளை (Standards) வைத்து, வெற்றி பெற்றோருக்குப் பதக்கங்கள் வழங்கிக் கெளரவித்தது மத்திய கல்வித் துறை. இப்பொழுது இந்த சோதனைப் போட்டிகளின் பெயரானது மாற்றம் பெற்றிருக்கிறது. இதன் பெயர் தேசிய 2-L-60ğlpğ5ğlı Lio (National Physical Fitness Scheme) என்பதாகும். 15. கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவ மாணவியர் உடற் கல்வி ஆய்வுத் துறையில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்காக உதவித்தொகை அளிக்கும் முறைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு முன்னேற்ற உதவியது. 髻 16. யோகாசனப் பயிற்சிகள் மற்றும் இந்திய நாட்டுப் பயிற்சிகளின் மேம்பாட்டுக்காக உழைத்த கைவல்யதாமா, மாதவ யோகா மந்திர் போன்ற நிறுவனங்களுக்கும், தக்க