பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி o 267 முறையில் உதவித் தொகை வழங்கி உற்சாகப் படுத்தியது இந்திய அரசு. 17. விளையாட்டுத் துறையில் தொடர்ந்து சிறந்து விளங்கிய வீரர்கள், வீராங்கனைகளில், மிகச் சிறந்தவர் களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அர்ஜூனா விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது. - 18. 1961ம் ஆண்டு விளையாட்டுத் துறை பயிற்சி உலகில் விடிவெள்ளி போலத் தோன்றியதுதான் தேசிய Luisbälä, ö, påloréjà (National institute of Sports). §§53, கழகம் முதலில் பாடியாலாவில் தொடங்கப் பெற்றது. அதன் அருமையான பணியினைத் தொடர்ந்து நாட்டின் மற்றப் பகுதிகளுக்கும் இத்தகைய நற்பணியை நல்க வேண்டும் என்ற நன்னோக்குடன், தெற்குப் பகுதியில் 19756ü பெங்களுரிலும், கிழக்குப் பகுதியிலும் 1983ல் கல்கத்தாவிலும் தேசிய பயிற்சிக் கழகம் தொடங்கப்பட்டது; 19. 1962ம் ஆண்டு, தேசிய அளவில், உடற் கல்விப் பாடத்திற்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஒரு சீராக நாடெங்கும் உள்ள பள்ளி நிறுவனங்கள் பின்பற்றிக் கொள்ளுமாறு, புத்தக வடிவில் பதிப்பித்து இந்திய அரசு வழிகாட்டியது. 20. உடற் கல்வியில் இளங்கலைப்பட்டம் (B.P.Ed.) இருந்தது போலவே முதுகலைப் பட்டமும் (M.P.Ed) வழங்கப்படவேண்டும் என்ற வேட்கையுடன், பல பல்கலைக் கழகங்களுக்கு இப்பட்டப்படிப்பைத் தொடங்க அரசு அனுமதி அளித்தது. அவற்றுள், வடநாட்டில் பஞ்சாப் மற்றும் ஜிவாஜி பல்கலைக் கழகங்கள், தென்னாட்டில் மதுரை பல்கலைக்