பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இந்திய விளையாட்டு ஆணையகம் (Sports Authority of India) அகில இந்திய விளையாட்டுக்கழகம்(All India Council of Sparts) என்ற அமைப்புதான், இந்தியநாட்டில் தலையாய கழகமாக அமைந்து, மத்திய அரசுக்கு விளையாட்டுக்களின் வளர்ச்சிக்கு .ே ண்டிய அரிய பரிந்துரைகளை எல்லாம் வழங்கிவந்தது. w ■■ இந்தக் கழக இந்திய விளையாட்டு ஆணையகம் (SA) என்ற ஒன்று தோன்றியவுடன், அதற்கு இடம் அளித்துவிட்டு மறைந்து போனது. - SA கழகம் 1982ம் ஆண்டு அமையப்பெற்றபோது, மறைந்த பிரதமர் இந்திரகாந்தி, இதன் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் வளர்ச்சிக்காக, முதலில் 1 கோடிருபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தக் கழகத்தின் துணைத் தலைவராக, அப்பொழுது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த (1984) திரு. பூட்டாசிங் இருந்தார். - இந்த விளையாட்டு ஆணையகத்தின் பெருமுயற்சியால் தான், 1982ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்தியபோது, சிறந்த ஆடுகளங்களை அமைத்ததுடன், உலகமே வியக்கும் வண்ணம் போட்டிகளையும் நடத்திக் காட்டிப்பெருமைபெற்றது. இந்திய அரசின் விளையாட்டு மற்றும் கலாசார அமைச்சகத்தின்கட்டுப்பாட்டின்கீழ்தான், இந்த ஆணையகம் இயங்கி வருகிறது. இதன் செலவுகளுக்கான தொகையை, விளையாட்டு அமைச்சகமே ஒதுக்கி, உதவி வருகிறது.