பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உலக நாடுகளில் உடற்கல்வி

59



ஒட்டப் பந்தயத்தில் தொடங்கியது முதல் ஒலிம்பிக் பந்தயம். அடுத்தடுத்து வந்த ஒலிம்பிக் பந்தயங்களில் புதிது புதிதாகப் போட்டிகள் சேர்க்கப்பட்டதால், போட்டியை நடத்துவதற்காக நாட்களையும் அதிகமாக சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குறிப்பு: (Stade) என்ற கிரேக்கச் சொல்லுக்கு 200 கெஜ தூர ஓட்டம் என்பதுபொருள். ஓட்டத்தை நடத்துகிற அரங்கம் தான் பின்னர் Stadium என்று அழைக்கப்பட்டது.

(2) 400 கெஜ தூரத்தை 2 தடவை ஓடிமுடிக்க வேண்டும். அதை டயலஸ் (Dialus) என்று அழைத்தனர்.

(3) நீண்ட தூரமாக (24 தடவை ஓடவேண்டும்) ஓடும் 3 மைல் தூரத்தை, டாலிகாஸ் (Dolichos) என்று அழைத்தனர்.

(4) குத்துச்சண்டையும் மல்யுத்தமும் கலந்த ஒரு போட்டியை கடுமையான போட்டியாக அமைத்து, அதனை பங்கராஷியம் என்று கூறினர்.

இனி, 5 நாட்கள் நடைபெற்ற போட்டிகள் எவ்வாறு நடத்தப்பட்டன என்று காண்போம்.

முதல் நாள் போட்டி: ஆரம்ப வேலைகள், ஆயத்தப் பணிகள், மதசம்பந்தமான மரபுகள்- பலி தருதல், அணிவகுப்பு - உறுதிமொழி எடுத்தல், பிறகு ஓய்வு.

2-ம்நாள்போட்டிகள்:போட்டியாளர்கள்,அதிகாரிகள்,போட்டியாளர்களின் பெற்றோர், சகோதரர்களின் அணிவகுப்பு, போட்டியாளர்களை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல், ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கம், இதனைத் தொடர்ந்து சாரட்டுப் போட்டி, குதிரை சவாரிப் போட்டி, பென்டாதலான் போட்டி