பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



ஒட்டக்காரர்களால் பல நூறு மைல்கள் ஏந்திச் செல்லப்பட்டு, கடைசியாக அந்த நாட்டின் முக்கியமான பிரசித்திப் பெற்ற உடலாளர் ஒருவரால், அரங்கத்திற்குள்ளே கொண்டு வந்து, அதற்காக அலங்காரமாகவும், அதி உயரமாகவும் அமைக்கப்பட்டிருக்கும் தீபம் ஏந்தியில் கொளுத்தி, ஏற்றி வைக்கும் வைபவம், மிக விமரிசையாக நடத்தப்படும். இந்தத் தீபம், (பெருமைமிக்க 16 நாட்களும்) பந்தயம் நடைபெறுகின்ற நாட்கள் பூராவும் எரிந்து ஒளிகாட்டி, கடைசி நாளன்று அணைய, பந்தயங்கள் முடிவு பெற்றதாக அறிவிக்கப்படும். அந்தப் பதினாறு நாட்களும், பகல் இரவாக எரிந்து மக்களின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தி உயர்ந்த லட்சியத்தை உலகுக்குக் காட்டும் உன்னததீபமாக, ஒலிம்பிக் தீபம் மிளிர்கிறது. ஒளிர்கிறது. மாரதான் ஒட்டம் - ஒலிம்பிக் பந்தயத்தில் மிகக் குறைந்த தூர ஓட்டம் 100 மீட்டர். அதிக தூர ஓட்டம் 26 மைல் 385 கெஜ தூரமாகும். இந்த நீண்ட தூர ஓட்டமே மாரதான் ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதை முதன் முதலாக கிரேக்க நாட்டில் ஏதென்ஸ் நகரத்தில் நடைபெற்ற புதிய ஒலிம்பிக் பந்தயத்தின்போது, பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக, ஒலிம்பிக் கமிட்டியினர் இணைத்து வைத்தனர். இந்த இணைப்புச் செயலுக்கு முக்கிய பொறுப்பேற்று, நடத்த உதவியவர் மைக்கேல் பிரியல் எனும் பிரெஞ்சுக் காரராவார். இவரது முயற்சியினால் தான். ஒலிம்பிக் பந்தயங்களில் மாரதான் ஓட்டமும் ஒரு நிகழ்ச்சியாக மாறியது. இந்த மாரதான் ஒட்டம், கிரேக்க நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு திறமையான வீரனின் தேசபக்தியைத் தெரிய வைக்கும். சிறப்பான நிகழ்ச்சியின் வெளிப்பாடாகவே, வந்ததாகும்.