பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



கிரேக்கர்கள் போட்டியிட்ட பந்தயங்கள் எல்லாம், ரோமானியர்களை அதிகம் கவரவில்லை, கடுமையான கொடுமையான, இரத்தக் களரியுள்ள சண்டைகள் தாம், மக்களிடையே பிரபலமாகி வந்தன. அவையே அனை வரையும் கவர்ந்தன. அந்த அநியாயமான போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கிலே மக்கள் கூடினர்.

ரோமானியரின் வாழ்க்கை

இறுதியாக ஒன்று, ரோம இளைஞர்கள் எல்லாம், தங்கள் முன்னோரின் வழிகளையும், மரபுகளையும் முன்னுதாரண மாகக் கொண்டு வாழ்வைத் தொடர்ந்தனர். அதாவது கட்டுப்பாடு என்பதை அவர்கள் உயிர் போன்ற கடமையாகக் கொண்டு காத்து ஒழுகினர்.

பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது தான் நாட்டின் முக்கியமான கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து வாழ்ந்தனர். இராணுவ வாழ்க்கையை மேற் கொண்ட அந்நாட்டில் அடக்கம், கட்டுப்பாடு இவைகள் பிரதான அம்சங்களாக போற்றப்பட்டன.

தவறு செய்பவர்களுக்கு, குற்றம் இழைக்கிறவர்களுக்கு மரண தண்டனையே வழங்கப்பட்டது. இந்தத் தண்டனையை குற்றவாளியின் தந்தையோ அல்லது இராணுவ அதிகாரிகளோ வழங்குகின்ற வகையில் சட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. அதுவே சமுதாய மரபாகவும் இருந்தது.

இனி இவ்வாறு ஒப்பற்ற முறையில் வளர்ச்சி பெற்ற ரோமானியர் வரலாறு, தளர்ச்சியும் தடுமாற்றமும் பெற்ற சூழ்நிலைகளைத் தொடர்ந்து காண்போம்.