பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

99



உணர்வுகளை வலுப்படுத்தவும், வெளிப்படுத்தவும் கூடிய முனைப்புடனே உடற்கல்வியைக் கற்பித்தனர்.

அத்துடன், இத்தாலி முழுவதும் சுறுசுறுப்பான ஓய்வையும், சுகம் தரும் உல்லாசத்தையும் கொடுக்கின்ற பல l (Recreation centres) அமைச்சகம், உடற்கல்வி இயக்ககம் மூலமாக நிர்மாணித்து, மக்களை உறுதி வாய்ந்தவர்களாக மாற்றி அமைக்கும் மேன்மை மிகு முயற்சிகளை மேற் கொண்டது.

மாணவ மாணவியர்க்குக் கற்பிக்கும் மாண்புமிகு உடற்கல்வி ஆசிரியர்களை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரி 9érsopush (Academy of Physical Education) 1928ம் ஆண்டு இத்தாலிய அரசு ஏற்படுத்தியது. அந்தக் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்களுக்குக் குறுகிய காலப் பயிற்சி, நீண்டகாலப் பயிற்சி என்ற அளவில் பயிற்சி முறைகளை அமைத்து, ஆசிரியர்களாக்கி உயர்த்தியது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லதொரு கல்வி உடற்கல்வி என்ற நிமிர்ந்த நன்னோக்குடன் கூடிய ஆர்வம் இருந்ததால், குறையுடல் கொண்ட மக்களை, மற்றும் அங்கஹlனர்களாக ஆனவர்கள் இவர்களையும் ஒதுக்கி விட்டு விடாமல், அவர்களையும் முடிந்த அளவு உடற்கல்விப் பயிற்சிகளில் ஈடுபடுத்த அரசு ஆர்வம் காட்டியது. அதன் விளைவாக உடற்கல்வியானது உடல் குறை உள்ளவர்களின் (Physically handicapped) gospølgrq9 திட்டத்தை ஏற்படுத்தி, கற்றுத் தந்து அவர்களையும் கெளரவப்படுத்தியது. களிப்பில் ஆழ்த்தியது.

அத்துடன், கத்திச் சண்டைப் பயிற்சியை சிறப்பாகக் கற்றுத் தருகிற பள்ளிகளையும் அரசு அங்கீகரித்து, ஊக்குவித்தது.