பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

99


மாண்பும், நெஞ்சுரமிக்க வீர தீர சாகசபோர் வியூகங்களும்; சட்டத்தின் வழிகாட்டுதலில்தான் ஒரு நாடு விடுதலை பெற வேண்டும் என்ற அறப்போராட்ட உணர்வுகளையும், அயர்லாந்து நாட்டுத் தலைவர்களிடையே பார்ப்பதே அரிதாக உள்ளது.

அயர்லாந்து நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் டிவேலரா அயர்லாந்து காந்தியாகவே திகழ்ந்தார். அதனால்தான் அவரை, அயர்லாந்து நாட்டின் விடுதலைத் தந்தையாக அந்த நாட்டு மக்கள் போற்றுகிறார்கள்.


எகிப்து விடுதலை
வீரன் நாசர்!

உலக நாகரிகங்களில் ஒன்றாகப் போற்றப்படுவது எகிப்து நாகரிகம்! ஈஜிப்ட் என்று அழைக்கப்படும் இந்த எகிப்து நாடு, உலகத்தின் நதிகளில் மிக நீளமான நதி என்று கூறப்படும் நைல் நதியின் முகத் துவாரத்தின் அருகே உள்ள நாடு.

எகிப்து நாடு, பண்டையப் புகழ்வாய்ந்த, நாகரிகத்தின் சின்னமாக விளங்கிய, சிறப்புமிக்க நாடு! அதனால்தான், உலக மகாவீரர்களுள் முதல்வனான ஜூலியஸ் சீசரை தனது