பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

109



அமெரிக்க நய வஞ்சகத்தைக் கண்டு அஞ்சவில்லை நாசர் சோவியத் யூனியனிடம் பொருள் உதவி வழங்குமாறு கேட்டார். ரஷ்யா சோஷலிச நாடல்லவா? பொருளாதார உதவியை ரஷ்யா செய்தது! இந்த விவகாரத்திலும் அமெரிக்கா அவமானப்பட்டது.

எகிப்து நாட்டை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்ற நயவஞ்சகத்தால், அன்று வரை தங்களுக்கென்று ஒருநாடே இல்லாமல் இருந்த யூத இனத்தை எகிப்துக்கு பகையாக உள்ள ஓர் இனத்தை ஊக்குவித்து துண்டிவிட்டு, இஸ்ரேல் என்ற ஒருநாட்டைப் பூகோளத்திலே அமெரிக்கா தோற்றுவித்தது.

அமெரிக்கா அமைத்துத்தந்த இஸ்ரேல் எப்போது பார்த்தாலும் முஸ்லிம் நாட்டின் மீது தாக்குதல் நடந்துவதே அதன் வேலை. அதனால் எகிப்து நாட்டின் வளர்ச்சியும், வேகமும் தடைப்பட்டு நிற்கும்! அவ்வளவுதான்.

இருந்தாலும், மாவீரன் நாசர் புறத்தாக்குதல்களைச் சமாளித்தார். அதேநேரத்தில் எகிப்து மக்களையும் நாட்டையும் நன்கு செம்மைப்படுத்தினார்.

மாவீரன் நாசர் போதை மன்னர் பரூக்கின் அடிமைத்தனத்திலே, சிக்கிச் சீரழிந்த எகிப்து மக்களுக்கு விடுதலை வழங்கினார்!

பிரிட்டனின் பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்தும், அடிமைத்தனம் என்ற ஆணிவேரை அறுத் தெறிந்தும்