பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

உலக வரலாற்றில்


எகிப்து மக்களுக்கு சுதந்திர வாழ்வைப் பெற்றுத் தந்தவர் நாசர்!

வல்லரசு நாடுகளின் பொறாமை வம்படி வழக்குகளை எதிர்த்து, எகிப்து நாட்டைக் காப்பாற்றி, எகிப்து நாட்டையும், மக்களையும் மானத்துடன் சுயமரியாதை வாழ்வு வாழ வழிவகுத்துத் தந்தவர் மாவீரன் நாசர்!


ஆப்கானிஸ்தான் சுதந்திரம்
பிறைநிலா அமானுல்லா!

ஆப்கானிஸ்தானம் என்ற நாடு ஓர் இருண்டவீடு! உலகம் அந்த நாட்டைப் பற்றி நல்லஎண்ணமும், சிந்தனையும் பெற்றிருக்கவில்லை.

அமானுல்லாவின் புதுயுகம் தோன்றும்வரை மேற்கண்ட முடிவைத்தான் உலக வரலாறு உரைக்கிறது. ஆப்கானிஸ்தானம் என்ற நாட்டைப் பற்றி.

ஆப்கானிஸ்தானம் என்ற நாடு, நாகரிகமற்ற பழங்குடிமக்கள் வாழும் இருண்ட நாடு என்பதை மாற்றி, அந்த மக்கள் வாழ்க்கையிலே சுதந்திரம் என்ற ஓர் ஒளியை ஏற்றி, அவர்கள் தன்மானம் உள்ளவர்களாய், சுதந்திர உணர்வுள்ளவர்களாய், தலைநிமிர்ந்து நிற்கும் தகுதியை, சிறப்பை உருவாக்கத் தோன்றிய பிறைநிலா தான் அமானுல்லா என்ற மாவீரன்!