பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

115



சிந்தித்தார் அமானுல்லா. இந்த மக்களுக்கு இவ்வளவு சீர்த்திருத்தங்களையும் ஒரே முறையில் அவசரமாக, அவசியம் என்று நுழைத்தது தவறுதான் என்று தனது கடைசி நேரத்தில் உணர்ந்தார்.

அமானுல்லா என்னென்ன சீர்திருத்தச் சட்டங்களை அந்த நாட்டில் போட்டு அமுல்படுத்தினாரோ, அவை அனைத்தையும் உடனடியாக அவசரம் அவசரமாக பாச்சா-இ-சேக்கோ என்பவன் திரும்பப் பெற்றுக்கொண்டு அனைத்தையும் நிறுத்திவிட்டான். இதன் விளைவு என்னவாயிற்று?

துருக்கி நாட்டிற்கு பள்ளிக் கல்விப் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட பெண்கள் அனைவரும் திரும்பி ஆப்கான் நாட்டிற்கே வரும்நிலை ஏற்பட்டது. முக்காடு அணியும் பர்தா முறையே பழையடி பெண்களுக்கு ஏற்பட்டன. மாதர் சங்கங்கள் எல்லாம் கலைக்கப்பட்டு விட்டன. ஐரோப்பிய நாகரிக ஆடை அணிகள் முறை தடைசெய்யப்பட்டன.

இராணுவ வீரர்கள் பீர்களைக் குடிக்கலாம் என்ற அனுமதி பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இவை எல்லாம் காலம் கடந்துவிட்ட செயல்களாக மக்கள் இடையே நினைக்கத் தோன்றின. அமானுல்லா முயற்சிகள் எல்லாம் தோற்கும்படி அந்தக் கொள்ளைக்காரன் செய்துவிட்டதால் மக்களிடம் கலகங்களும், குழப்பங்களும் தோன்றி வலுத்துவிட்டன.

இந்த நேரத்தில் அமானுல்லா மக்கள் தரும் குழப்பங்களைத் தாங்க முடியாமல் ஆப்கானிஸ்தான்