பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

உலக வரலாற்றில்


திறக்கப்பட்டன. சலவைக் கருவிகள், அச்சு இயந்திரங்கள் சர்க்கரை ஆலை இயந்திரங்கள், போன்றவைகள் நாட்டில் அமைந்து பெருகின.

அமானுல்லா ஒரே நேரத்தில் இவ்வாறு மேற்கொண்ட முயற்சிகள் அளவுக்கு அதிகமாகிவிட்டதால், அவருடைய புதுமையான புதுத் திட்டங்களின் செலவுப் பளுக்கள் அதிகரித்துவிட்டன.

குறிப்பாக, விவசாயிகள் போன்றவர்கள் மீது அந்தச் செலவினப் பளுக்கள் வரிகளாக விழுந்தன. அதிகப்படியான வரிப்பளு அவர்களை வாட்டிவதைத்தது.

இந்த சமூகச் சீர்திருத்தங்கள் ஆப்கான் நாட்டு மக்களை வேதனைகளில் ஆழ்த்தின. அத்துடன், பர்தா என்ற பெண்களின் முக்காடு அணியும் மதச் சடங்கு முறையை அகற்றிவிட்டார். ஐரோப்பா நாடுகளில் உள்ள ஆடைப் பழக்க வழக்க முறைகளை மக்களிடம் புகுத்தினார். இந்த முறைகளை அமானுல்லா நாட்டில் வற்புறுத்தி நுழைத்ததால், மக்கள் தங்களது பொறுமைகளை இழந்து விட்டார்கள்.

இந்தச் சீர்திருத்த முறைகளால் மக்கள் இடையே கலகங்கள் ஏற்பட்டுவிட்டன. குழப்பங்கள் சூழ்ந்தன. இந்த நேரத்தில்தான் 1929-ஆம் ஆண்டு பாச்சா-இ-சேக்கோ என்ற கொள்ளைக்காரன் ஒருவன் காபூல்நகர் மீது படையெடுத்துப் பிடித்துக்கொண்டான்.