பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

உலக வரலாற்றில்


படி அது தூண்டுகிறது. கம்யூனிசம் அவனவன் ஆற்றலுக்குத் தக்கவாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வழிவகுக்கிறது. மனிதன் பேரிழப்பை மேற்கொள்வதற்கு வேண்டிய தூண்டுதல் பொதுவுடைமையில் இல்லை. இவ்விரு கொள்கைகளில் கடவுள் நம்பிக்கைக்குப் பெரும்பாலும் இடமில்லை எனலாம்.

மார்க்ஸ் கொள்கைகள் மக்களிடையே பரவினபோது அவர்களிடையே விழிப்பு ஏற்பட்டது. 1848–ஆம் ஆண்டு ஒரு பெரிய கிளர்ச்சியைத் தொடங்கினார்கள். மார்க்சும் அந்த இயக்கத்தில் கலந்து கொள்ளவே, அப்போது ஜெர்மன் அரசாங்கம் அவரையும் அவர் மனைவியையும், நாட்டைவிட்டு வெளியேற்றியது. கணவனும் மனைவியும், பாரிஸ் சென்றனர். அங்கும் அரசாணை துரத்தியது. பின்னர், பிரஸ்ஸல்ஸுக்குச் சென்றார்கள். அங்கும் புரட்சியின் சின்னங்கள் தோன்றின. மார்க்சும் அவரது மனைவியும் சிறைப்பட்டனர். புரட்சிக்குப் பிறகு அவர்கள் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டனர். தொழிலாளர்களுக்காக உழைக்க வேண்டும் என நோக்கம் உடையவர் மார்க்ஸ். இவர் இலண்டனிலும் பிரஸ்ஸல்சிலும் இருந்த பல புரட்சிக்குழுக்களுடன் சேர்ந்து இடைவிடாது உழைத்தார். முதலாளியினமும், அரசாங்கமும் இவரைத் தாக்கினர். தொழிலாளிகளிலும் சிலர் இவரை உணர்ந்து கொள்ளாமல் அவநம்பிக்கை கொண்டார்கள். படிப்படியாக மார்க்ஸ் கூறும் கொள்கையின் உயர்வையும் அதனால் தமக்கு