பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

33


பியூசிக், துக்கு மேடையிலே முழக்கமிட்டார். “ஏ. கொடுங்கோலர்களே, எனது நாட்டின் உயிர் நாடிகள், உயிர்மூச்சைக் கொன்றுவிட்டதாக எண்ணி மனப்பால் குடிக்காதீர்கள். நீங்கள் நினைப்பதுபோல் நான் குற்றவாளி அல்ல. என் நாட்டு மண் சுதந்திர பூமியாகக் காட்சி தர வேண்டும் என்று ஆசைப்படும் நான் குற்றவாளியா? ஊருக்குள் எல்லை தாண்டி உத்திரவிடாமல் போர்க்கோலம் பூண்டு என் தாய்நாட்டிலும் கால்வைத்த கொள்ளையர்களே நீங்கள் தான் குற்றவாளி. நான் தான் நீதிபதி. இந்தத் தூக்குமேடைதான் நீதிபதியாகிய என்னுடைய நீதிமன்றம், இந்த நீதிமன்றத்திலிருந்து நீதிபதியாகிய நான் உங்களுக்குத் தீர்ப்பு அளிக்கிறேன். உங்கள் ஆட்சிக்கு கடைசிக் காலம் நெருங்கிவிட்டது. உங்கள் சவக்குழியை நீங்களே தோண்ட தயார் ஆகுங்கள்”. என்று துக்குமேடையிலே நின்று விடுதலை வீரன் ஜீலியஸ் பியூசிக் என்று முழக்கமிட்டார்.

தூக்கு மேடையிலே நின்று கொண்டு அந்த மாவீரன் தீர்பளித்ததற்காக, அவன் உயிரைவிட்டது என்னவோ உண்மை, ஆனால் அந்த மேடையிலே நின்ற அந்த மாவீரன் அளித்த நீதித்தீர்ப்பினைகாலம் பிறகு நிறைவேற்றியது.

1942-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் நாளில் இட்லரின் இரகசிய போலீஸ் அந்த விடுதலை வீரனைக் கைது செய்தது. பிரேக் நகர சிறையிலே அடைத்தது. சித்திரவதையும்,