பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

43


மக்கள் ஆதரிக்கிறார்கள். பலவித இலவசக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பக் கல்வி துறைகள், பல்கலைக் கழகம் முதலியவற்றை நிறுவுவதற்கு இவர் வழி வகுப்பார்.

பாட்டாளிகளின் கடன் தொல்லைகளைத் தீர்க்கவும், வேளாண்மை அபிவிருத்திக்கு முக்கியமான உதவிகளை வழங்கவும் வழிகண்டார். தொழிலாளரின் வருவாயில் 12 சதவிகிதம் உயரவும், தொழிலாளர் சங்கங்களுக்கு வேண்டிய உரிமைகளையும் வழங்கினார். அரசியல் நிர்வாகத்தில் பதவி வகிக்கும் பிரதமர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்கட்சித்தலைவர்கள் அவர்களுடைய உறவினர்கள் ஆகியோர்கள் அரசியலில் தங்கள் பதவியை, பொதுநலத்திற்குப் பயன்படுத்தாமல் சுயநலத்திற்கு உபயோகித்தால் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதற்கான ஒரு மசோதாவை இவர் உருவாக்கினார்.

பொதுவாக இந்த நாள் வரையில் நாட்டில் நடமாடிய ஊழல்களைக் களைந்து நேர்வழியில் நிர்வாகத்தை இயக்கி நாட்டுப் பொருளாதார அபிவிருத்திக்கு வேண்டிய திட்டங்களை மேற்கொண்டார். திட்டமிட்டு இருக்கின்ற இவரது அரசுப் பணியில் வெற்றி கிடைத்தால், சமுதாய, பொருளாதார, அரசியல் துறைகளில் போதிய அளவு பலன்களை மக்கள் அனுபவிப்பார்கள். தோல்வி நேர்ந்தால் இவருக்கும் இவர் பதவிக்கு வரவிரும்பிய கட்சிகளுக்கும், மக்களிடையே இருக்கின்ற செல்வாக்குப் போய்விடும்.