பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

உலக வரலாற்றில்


அரங்கு ஒன்றை நிறுவினார். அதனால் அந்த நாட்டில் இவர் ஒரு கலைஞராகத் திகழ்ந்தார்.இவர் சகலகலா வல்லுனராகத் திகழ்ந்தார். முதல் உலகப்போர் முடிவடைந்த பிறகு, அந்த நாட்களில் புகழ்பெற்ற அரசியல் பயிற்சிகளைப் பெற்றார். அந்த நாட்களிலே தனது நாட்டு அரசியலில், தமக்கென சிறப்பான ஓர் இடத்தை இவர் பெற்றார். போராட்டங்களிலே கலந்து கொண்டு பலதடவை சிறை சென்றார். நாடுகடத்தல் போன்ற இன்னும் பல தண்டனையை அனுபவித்தார்.

இரண்டாம் உலகப்போரில் உலகை உலுக்கி எடுத்த இட்லரின் துருப்புகள் அவருடைய தாய்நாட்டை ஆக்கிரமித்துத் தாக்கியது. அதனால் இவர் அண்டைய நாட்டிற்கு சென்று தேசிய மாற்று அரசாங்கம் ஒன்றை உருவாக்கி அதன் நிர்வாகத்தை இயக்கினார். 1950-52 ஆம் ஆண்டுகளில் உதவிப் பிரதமராக பொறுப்பேற்று இருந்த இவர், அப்போது கிரேக்க புகையிலைக்கு ஜெர்மனியில் மார்கெட் தேடித் தந்தார். தனது தாய்நாட்டுக்கு இவர் செய்த சேவை மிகவும் சிறப்பாய் குறிப்பிடத்தக்கது, மக்களின் குடியுரிமை உணர்ச்சியைத் தூண்டியதுதான்.

இவருடைய தலைமையின் கீழ் இயங்கும் மக்களின் ஐக்கிய கட்சி இப்போது பதவிக்கு வந்தது, நாட்டில் ஒரு புதிய யுகம் உதயமாக இருப்பதின் அறிகுறியாகும். பிரதமரின் கவனம் பல துறைகளில் சீர்திருத்தங்கள் செய்வதில் ஈடுபடுவது நிச்சயம். சைப்ரஸ் பிரச்சனைக்கு தீர்வு காண இவர் வகுத்து இருக்கும் தீர்வை அந்நாட்டு