பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

உலக வரலாற்றில்


உடன்படிக்கையில் கையெழுத்துப் போடாவிட்டால் பெரிய போரே துவங்கும் என்று எச்சரித்தார். அதனால் டிவேலரா பிரதிநிதிகள் கையெழுத்தைப் போட்டுவிட்டார்கள்.

ஐரிஷ் சட்டசபையில் அந்த உடன்படிக்கை வந்தபோது, அயர்லாந்து நாட்டுக்குத் தேவையான சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்று டிவேலரா சாந்த உடன்படிக்கையைக் கண்டனம் செய்து தள்ளிவிட்டார். ஆனால், அவருக்கு அந்த உடன்படிக்கையை நிராகரித்து ஒரே ஒரு ஓட்டுரிமை தேவை என்பதால், பிரதிநிதிகளில் ஒருவராகிய ஆர்தர் சிரிவித் என்பவர் சட்டசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் உடன்படிக்கையைக் கண்டித்தபோது, மக்களைக் கவனியாது தாம் கொண்ட கொள்கையில் உறுதியான நம்பிக்கை மிகுதியாக வைத்திருந்தார்.

நீண்ட நெடுநாட்களாக அயர்லாந்து மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போர் செய்ததும், சொல்ல முடியாத வேதனைகளையும், கஷ்ட நஷ்டங்களையும் ஏற்றுக் கொண்டதும் அரைகுறையான சுதந்திரத்துக்காக அல்ல. தாங்கள் இழந்துவிட்ட முழு ஆதிக்கத்தைப் பெறுவதற்கே என்பதையே டிவேலரா நினைத்துக்கொண்டிருந்தார்.

ஆங்கில நிலை முதலாளிகள் விவாசாயிகளுக்குக் கொடுமை செய்யாதிருந்தால் மாத்திரம் போதும் என்று