பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24
உலக
 

'என்ன நேருமோ' என்ற அச்சத்தில் நிற்கிறார். அந்த மேதைதான், உலகப்புகழ் பெற்ற வானயியல் மேதை. கலிலியோ.

கலிலியோ இத்தாலி நாட்டிலுள்ள பைசா நகரத்தில், 1564ம் ஆண்டு பிறந்தார். அதே நகரத்தின் பல்கலைக்கழகத்தில் படித்தார். கலிலியோ சிறுவயது முதற்கொண்டே யந்திரம் அமைப்பதிலும், இசை பயிலுவதிலும் கழித்தார். இவருக்கும் அரிஸ்டாட்டிலின் சீடர்களுக்கும், எப்போதும் வலுவான சர்ச்சை நடந்த வண்ணமிருக்கும். இவர் எதைச் சொல்கிறாரோ அதற்கு எதிராகப் பேசுவதுதான் அவர்கள் வேலை. ஒன்று: அரிஸ்டாடலின் சீடர்கள், லேசான பொருள் ஒன்றையும், கனமான பொருள் ஒன்றையும், அதாவது ஒரு. ராத்தல் குண்டையும் பத்து ராத்தல் குண்டையும் மேலேயிருந்து தரையை நோக்கிப்போட்டால், ஒரு பாத்தல் குண்டு பத்து நிமிடத்திலேயும் பத்து ராத்தல் குண்டு ஒரு நிமிடத்திலும் கீழே வரும் என்றார்கள்.

அதற்கு கலிலியோ, "இல்லை, இரண்டும் ஒரே நேரத்தில்' தான் தரையைத் தொடும்" என்றார். அதற்குக் காரணம் என்னவென்றால் பூமியின் இழுக்கும் சக்தி ஒரே வேகத்தில்தான் இருக்கிறது, ஆகவே இரண்டு குண்டுகளும் ஒரே நேரத்தில் தான் விழும் என்றார். இதை அரிஸ்டாடலின் சீடர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இரண்டாவதாக, எந்தப் பெருளும் பூமிக்குச் செங்குத்தாக வந்து விழுவதில்லை கொஞ்சம் சாய்வாகத்தான் வந்து விழும் என்பது கலிலியோவின் கருத்து. இதையும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் அரிஸ்டாடில் தன் சீடர்களுக்கு அப்படிச் சொல்லிவைக்கவில்லை. அதனால் கலிலியோ' கருத்தை அவர்கள் ஏற்க மறுத்தனர். ஆனால் அரிஸ்டாடல் சொன்னவற்றில் இதுபற்றிய கருத்து ஒன்று தான் தவறு என்பதை 1900 ஆண்டுகளுக்குப் பிறகு கலிலியோ காலத்தில்தான் ஒப்புக்கொண்டார்கள். என்றாலும், 'நம்முடைய தலைவர் கருத்துக்கு மாறாகச் சொல்கிறானே' இவன் என்று