பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விஞ்ஞானிகள்
25
 

பொறாமைக் கொண்டு எப்படியாகிலும் இவனை மாட்டிவைக்க வேண்டுமென்ற செய்த சூழ்ச்சிதான், நியாய சபையில் கொண்டுபோய் நிறுத்தியது. கலிலியோ வேறு வழியில்லாமல் நான் சொன்னது தவறுதான் இனி அப்படிச் சொல்வதில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டார். அப்படியும் அவர் உதடுகள், 'சூரியனை பூமிதான் சுற்றுகிறது; பூமியை சூரியன் சுற்றவில்லை' என்றுதான் அசைந்து கொண்டிருந்தது.

மேலும் அவர் கண்டுபிடித்த சிலவற்றை விவரிப்போம்:

1. ஒருநாள் அவர் மாதாகோயிலுக்குச் சென்றிருந்தார். அங்கே தொங்கிக்கொண்டிருந்த விளக்கு ஒன்று காற்றில் அசைந்தாடுவதைக் கண்டார். அந்த விளக்கு மெதுவாக ஆடினாலும் வேகமாக ஆடினாலும் ஒரே நேரந்தான் ஆகிறது என்பதைக் கண்டுபிடித்தார். அதைக்கொண்டுதான் கடிகாரத்தில் பெண்டுலத்தை மாட்டி, அதை இப்படியும் அப்படியும் ஆடவைத்து அது வேகமாக ஆடினாலும் மெதுவாக ஆடினாலும் ஒரே நேரந்தான் பிடிக்கிறது என்பதைக் கண்டு கொண்டார்.

அத்தகைய கெடிகாரம் ஒன்றைச் செய்து முதன்முதலில் மருத்துவர்களுக்குப் பயன்படும்படி தந்தார். அப்போதெல்லாம் மருத்துவர்கள் ஒரு நோயாளியின் நாடி எவ்வாறு வேலை செய்கிறது. என்பதையறிய மிகுந்த தொல்லைப் பட்டார்கள். கலிலியோவின் கண்டுபிடிப்புக்குப் பின்புதான் மருத்துவர்கள் நோயாளியின் நாடியைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் கடிகாரத்தைப் பார்த்து நாடித் துடிப்பு எவ்வாறு உள்ளது என்பதையறிகிறார்கள்.

அதற்கடுத்தாற்போல் தெர்மாமீட்டர். இது நோயாளியின் உடலில் எந்த அளவுக்குச் சூடு இருக்கிறது என்பதைக் கண்டறிய, பெரியவர்களாயிருந்தால் வாயிலும், சிறுகுழந்தைகளாயிருந்தால் அக்குளிலும் வைத்துக் கண்டுபிடிக்கிறார்கள். 101, 102, 103 என்கிறபோதே காய்ச்சல் வந்து விட்டது என்கிறார்கள், நமக்கும் உடல் சூடாயிருப்பது பூ--116--உ-2