பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் 27 என்பதைப் பற்றி உண்மையறியாமல் திகைத்தனர். சிலர் நட்சத்திரம் என்றனர். சிலர் விண்வீழ்கொல்லி என்றனர். அப்போது கலிலியோ அது கிரகங்களில் சேர்ந்ததுமல்ல. விண்வீழ்கொல்லியுமல்ல. அதுவும் இப்போதிருக்கும் நட்சத் திரங்களுக்கு அப்பாலுள்ள நட்சத்திரம் என்று நிரூபித்துக் காட்டினர். ஒளி, நிறம், ஒலி முதலியவைகளைப் பற்றிய பல நூல்களே எழுதி வெளியிட்டார். ஆனால் அவர் வானத்தைப் பற்றி 1809க்குப் பிறகே அதிகமாக ஆராய்ந்தார். ஒருநாள் தெரு வில் போய்க்கொண்டிருந்தபோது, சிறுவர்கள் சில கண்ணுடித் துண்டுகளே வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு சிறுவன் தற்செயலாக உட்கவிந்த கண்ணுடிவில்லே ஒன்றைக் கண்ணுக்கருகிலும், புறங்கவிந்தவில்லே ஒன்றை சிறிது தூரத்திலும் வைத்து மாதாகோவில் கோபுரத்தைப் பார்த்தான். பார்த்தவுடன் துள்ளிக் குதித்துக்கொண்டு, பார்த்தீர்களா, அந்தக் கோபுரம் என்னருகிலேயே வந்துவிட்டது என்று கத்தின்ை. அதைக் கேட்ட அவனுடைய தந்தையும் அவற்றை வாங்கி, அதே மாதிரி செய்து பார்த்தார். அவருக்கும் அப்படியே தெரிந்தது. இந்தச் செய்தி கலிலியோ காதுக்கு எட்டியது. அவர் இதைப் போன்ற இரண்டு கண்ணுடிகளே முன்னும் பின்னுமாக நகரும்படிச் செய்து, தொலைநோக்குக் கண்ணுடி செய்தார். - அடுத்து, ஒரு ஓசை நம்முடைய காதுகளுக்குக் கேட் பதற்கு முன்பாகவே, ஒளி நம் கண்களுக்குத் தெரியும். அதாவது இடி, மின்னல் என்று வைத்துக் கொண்டால் இடியின் ஒசையைவிட மின்னல் ஒளி வேகமாக நம் கண் களுக்குத் தெரியும். ஒலி, ஒளியின் வேகத்தை அறிய வேண்டியது மிகத் தேவையானது என்று அவர் கூறியதற் கொப்ப, டேனிஷ் விஞ்ஞானி ரோமர் என்பவர், ஒளியின் வேகம் ஒரு செகண்டுக்கு 1,80,000 மைல்கள் என்று கண்டு பிடித்துச் சொன்னர்.