பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விஞ்ஞானிகள் 55 அடுத்து, தலைவர் ஹக்ஸ்லியின் பெயரை அழைத்த வுடன், தன்னுடைய முழங்காலில் தட்டிக்கொாண்டு பிஷப் அவர்களின் அர்த்தமில்லா உரையைக்கேட்டு, தன்னுள் கடவுள்தான் தன்னுடன் பிஷப் அவர்களை வாக்குவாதத்தில் இழுத்துவிட்டிருக்கவேண்டும் என்று எண்ணி, ஹக்ஸிலி தம் பேச்சைத் தொடங்கினர். 'அறிவியல் வளர்ச்சி குறித்து தான் நான் இங்கு பேச வந்துள்ளேன். என்னுடைய கட்சிக் காரர் சார்லஸ் டார்வின் அவர்களின் கொள்கைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பிஷப் அவர்கள் கூறி, நான் கேட்க வில்லை என்ருர் ஹக்ஸ்லி. பிஷப் அவர்கள் எவ்வாறு வாதங் களில் கலந்து கொள்வதற்குத் தகுதி பெற்றிருக்கவில்லே என்பதை எடுத்துக்கூறி, மனித இனம் எவ்வாறு ஆக்கப் பட்டது குறித்துப் பேசத் தொடங்கினர் ஹக்ஸ்லி. வளர்ச்சி உண்டாக்கப் பட்டவனிடமிருந்து வரப்பெற்றது என்கிறீர். ஆனல் கடவுள் உங்களை உண்டாக்கினர் என்றும் சொல்கிறீர், நீர்உண்டாக்கப்பட்டபோதுபென்சில்வைக்கும்பெட்டியைவிட சிறிய பொருளாகவே இருந்தீர் என்பதையும் நீவிர் அறிவீர், என்று கூறினர். கடைசியாக நான் ஒரு குரங்கினை என்னு டைய மூதாதையருகக் கொள்வேன். குரங்கிலிருந்து பிறந்த ஒருவன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு சிறிதளவேனும் வெட்கமில்ல’’ என்று கூறி, பிஷப் அவர்களின் மூதாதையர் சாமுவேல் வில்பர்போர்ஸ் (Samwelwilberforce) அவர்களின் குளுதிசயங்களை இடித்துக்கூறும்வகையில் கலாச்சாரத்தின் அன்பளிப்புகளை விலகூறி விற்று, மனித சேவைக்கு புறம்பா யிருந்து பொய்யின் முழு உருவமாயிருந்த மூதாதையரின் வழி வந்தவன் என்று சொல்லிக்கொள்வதில் நான் மிகவும் வெட் கப்படுகிறேன்’ என்று கூறி முடித்தார் ஹக்ஸ்லி. கூடியிருந்த மக்கள் ஆரவாரம் கட்டுக்கடங்கவில்லை. பிஷப் அவர்கள் அசட்டுத்தனமாக சிரித்துக்கொண்டிருந்தார். கூட்டத்தினர் ஆரவாரத்தையும் மகிழ்ச்சியையும் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டே இருந்தனர். புரூஸ்டர் சீமாட்டி (Lady breusten) ஹக்ஸ்லியின் பெருமை மிகுந்த பேச்சு காரணமாக மூர்ச்சை யடைந்து தூக்கிக்கொண்டு செல்லும் பேற்றைப் பெற்ருர்.