பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 அறிவுலக மேதை ஐன்ஸ்டீன் உலகில் நாகரிகம் முக்ாவிடத் தொடங்கிய காலம் முதற்கொண்டு பல்வேறு தத்துவ ஞானிகள், அறிவியல் மேதைகள், அரசியல் வித்தகர்கள் தோன்றி அவ்வப்போது பல்வேறு கருத்துக்களைத் துளவிச் சென்றிருக்கின்றனர். அவர்கள் விதைத்த கருத்துக்கள் காலத்தையும் வெல்லும் கோட்பாடுகளாக மாறி, வரலாற்றை உருவாக்கி வரு கின்றன. அத்தகைய வரிசையில் அறிவுலகில் பத்தொன் பதாம் நூற்றண்டில் தோன்றியவர்தான் ஐன்ஸ்டின் என்ற விஞ்ஞானி. - - - உலகிற்குப் பல அற்புதங்களே வழங்கிய ஜெர்மனி, அப்போது வடக்கு தெற்காகப் பிரிந்து இருந்தது. ஆதிக்க வெறியும் சமய வெறியும் கொடுங்குணமும் கொண்டு வடக்கு ஜெர்மனி விளங்கிவந்தது. அதே சமயம் தெற்கு ஜெர்மனி பண்பாட்டையும், பகுத்தறிவையும் துணேயாகக் கொண்டு அமைதியாக அறிவுப் பணியாற்றிவரும் நாடாகத் திகழ்ந்தது. அந்தத் தெற்கு ஜெர்மனியின் சிற்றுார்களில் ஒன்றன. உல்ம்: என்னும் இடத்தில் 1879ம் ஆண்டு, மார்ச் திங்கள் 14ம் நாள், ஹெர்மன் ஐன்ஸ்டீன் என்பவருக்கும்,பாலின் என்ற அம்மை யாருக்கும் அருமை மகளுகப் பிறந்தார் ஐன்ஸ்டின்.