உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 உள்ளம் கவர் கள்வன் னத்தில் எழுந்தருளி வந்தார்.உமாதேவியார் பாலை ஒரு கிண்ணத்திற் கறந்து அதில் ஞானத்தைக் குழைத்து அழுத பிள்ளைக்கு ஊட்டினார். பின்பு இருவரும் மறைந்தனர். அம்மையின் திரு முலைப்பால் உண்டமையால் அந்தப் பிள்ளைக்குச் சிவஞான உணர்ச்சி உண்டாயிற்று. அவர் திருஞான சம்பந்தர் என்ற திரு நாமம் பெற்றார். குளத்தில் நீராடிவிட்டுக் கரைக்கு வந்த சிவபாத இருதயர் தம்முடைய குழந்தையைப் பார்த்தார். வாயில் பால் வழிய நிற்பதைக் கண்டு, 'யார் உனக்குப் பால் தந்தார்?" என்று அதட்டிக் கேட்டார். ஞானசம்பந்தர் ஒரு விரலால் தோணியப்பரைச் சுட்டிக் காட்டி, "தோடு டைய செவியன்" என்ற பாடலைப் பாடி, "இவரே!" என்று காட்டினார். அந்தப் பாடலே திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய முதற் பாடல். பிறகு பத்துப் பாடல் களாகப் பாடி அந்தப் பதிகத்தை நிறைவேற்றினார். தேவாரத்தின் முதல் பதிகம் அதுவே. மூன்று ஆண்டுக் குழந்தை ஞான சம்பந்தர். அந்தக் குழந்தை மாசு மறுவற்ற தூய உள்ளம் படைத்தவர். இறை வனுடைய திருக்கோலத்தைப் பாடுகிறார். அந்தத் திருக் கோலத்தில் வேறு நிறமுள்ள பொருள்கள் பல இருந்தும் அவற்றில் இந்தக் குழந்தையின் உள்ளம் வில்லை. இறைவன் திருக் கழுத்தில் நீல நஞ்சம் இருக்கிறது; அவன் திருமுடியில் சிவந்த சடை இருக்கிறது; அங்கே பொன் னிறக் கொன்றையும் உண்டு. இப்படிப் பல நிறமுள்ள பொருள்கள் இறைவனிடம் இருந்தாலும் தூய வெண் பொருள்களிலே தான் அந்தக் குழந்தையின் கண் ஓடியது.