உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் கவர் கள்வன் உலகில் உள்ள குழந்தைகளுக்கு வண்ண வண்ண மான விளையாட்டுப் பண்டங்களை வாங்கித் தருவார்கள். கண்ணைப் பறிக்கும் வண்ணப் படங்கள் உள்ள புத்தகங்களை அளிப்பார்கள்.உலகியலில் பல நிறங்களோடு ஊடாடிப் பல குணங்களைப் பெற்றுப் பல செயல்களைச் செய்ய இருக் கும் குழந்தைகளாதலின் பலவகை வண்ணங்களைக் கண்டு அவை மகிழ்ச்சி அடைகின்றன. ஆனால் இந்தக் குழந் தையோ ஞானசம்பந்தக் குழந்தை,ஞானம் தூயது; அதற்கு வெண்மை நிறந்தான் அடையாளம், குணங்கள் பலவானாலும் அவற்றை மூன்றுக்குள்ளே அடக்குவார்கள். சத்துவம், ராஜசம், தாமசம் என்பவை அவை. இவற்றிற்கு முறையே வெண்மை, செம்மை, கருமை என்பவற்றை நிற மாகக் கூறுவார்கள். எம்பெருமாட்டி ஊட்டிய ஞானப் பால் வெண்மை நிறம் பெற்றது. அதனை உண்ட பிரான் தூய சத்துவ குணமே பெற்றார். அவர் கண்கள் இறைவன் திருக்கோலத்தில் சத்துவ குணத்தைக் காட்டும் வெண் மையையுடைய பொருள்களையே கண்டு மகிழ்ந்தன. தந்தையார், "யார் பால் கொடுத்தார்?" என்று கேட் டார். அதற்குக் குழந்தை நேர்முகமாகப் பதில் சொல்ல வில்லை. யாரோ அயலார், எந்த உறவின் முறையும் இல்லா தார், தம் குழந்தைக்குப் பால் கொடுத்துச் சென்றாரோ என்ற ஐயத்தால் சிவபாத இருதயர் கேட்டார். சம்பந்தப் பெருமான், "இறைவன் கட்டளையிட இறைவி பால் கொடுத்தாள் என்று சொல்லியிருக்கலாம். அவர் அப் படிச் சொல்லவில்லை. "இத்தகைய திருக்கோலத்தில் வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதோ இந்தப் பீரம புரமாகிய சீகாழியில் உள்ள பெருமான்" என்று சொல் கிறார். பாலைப்பற்றிய பேச்சே பாட்டில் வரவில்லை