உள்ளம் கவர் கள்வன் சம்பந்தப் வெருமான் வெறும் பாலை உண்ணவில்லை. மற்றவர்கள் தரும் பால் நாவுக்கு இனிமை தரும்; அப்பால் வயிற்றிற்குள்ளே சென்று பசியைப் போக்கும். அது உடம்புக்குப் பயனைத் தருவது, ஆனால் உமாதேவியார் தந்த பால் சிவஞானத்தை அருளியது. அது உள்ளத்தைக் கவர்ந்து அதன் வழியே உயிருக்கு இன்பந் தருவது. மற்ற வர்களெல்லாம் பலபல நெறியிலே சென்று பலபல குண முடையவராகிப் பலபல நினைவும் பலபல உரையும் பலபல செயலும் பெற்றுப் பாசத்துக்கு உட்படுகிறவர்கள். ஞான சம்பந்தப் பெருமானோ ஒரு நெறியில் வரும் ஞானத்தால் ஒரு நெறியிலே மனம் வைத்து உணர்ந்து, இறைவன் திருநெறித் தமிழ் ஒன்றையே உரைத்து, அவனைப் பணி யும் தொண்டு ஒன்றையே செய்யப் புகுந்தவர். '. ஆகவே, "எனக்குப் பால் கொடுத்ததைத் தானே நீங்கள் கேட்கிறீர்கள்? அவன் என் உள்ளத்தையே கவர்ந்துவிட்டான். உலகில் யார் யாரையோ உறவினராக எண்ணி யிருந்த பழைய உள்ளம் எனக்கு இப்போது இல்லை. தானே நினைத்துத் தானே இன்ப துன்ப உணர்ச்சி பெறும் உள்ளத்தை அவன் கவர்ந்து கொண் டான். இனி அந்த உள்ளம் என்னிடம் இல்லை; அவனி டம் இருக்கிறது; அவன் வசப்பட்டிருக்கிறது.அவன் அதனை எப்படியெல்லாம் இயக்குகிறானோ அப்படியெல்லாம் இயங்கும். நினைக்கச் செய்தால் நினைக்கும்; மறக்கச் செய் தால் மறக்கும். இனி ஒரு கணமும் அவனை விட்டுப் பிரி
'தம்பெருமைக் கழல்பேணும், ஒருநெறியில் வருஞானம் கொடும் பதனுக்கு உடன் இருந்த; அருமறையர் ளுடையவனை அளித்தருள அருள்செய் வார் (பெரிய புராணம், திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் புராணம், 65,) "ஒருநெறிய மனம் வைத்து ர் ஞானசம்பந்தன் (தேவாரம்)