உள்ளம் கவர் கள்வன் 11 மறைத்துச் சொல்வது வழக்கம். இங்கும் இந்தஓ என்ற மந்திரத்தை வேறு ஓர் எழுத்தோடு சேர்த்து வைத்தார் ஞானசம்பந்தர். மிகவும் நுட்பமான பொருளை ஏதேனும் ஒரு கருவியால் எடுப்பார்கள். நுட்பமான பொருளை யுடைய ஓங்காரத்தைத் தகர மெய்யோடு சார்த்தி, தோ என்ற எழுத்தை முதலில் வைத்து, "தோடு" என்று தமிழ் வேதத்தைத் தொடங்கினார் சம்பந்தர். இதையும் சேக் கிழார் சொல்லுகிறார். "எல்லையிலா மறைமுதல்மெய் யுடன் எடுத்த எழுதுமறை மல்லல்நெடுந் தமிழால் இம் மாநிலத்தோர்க் குரைசிறப்ப" என்பது அவர் சொல்லும் விளக்கம். 'எல்லையில்லாத மறையின் முதல் எழுத்தை ஒரு மெய்யெழுத்தோடு சேர்த்து வைத்து எடுத்துக் கூறிய, எழுதுவதற்குரிய வேதமாகிய வளம் மிக்க நீண்ட தமிழால் இந்த மாநிலத் தில் உள்ளவர்களுக்குப் புகழ் சிறக்கும்படியாக' என்பது இதன் பொருள். மந்திரத்தை மறைத்துச் சொல்வார் தகர மெய்யோடு சேர்த்து, தோ என்று தொடங்கினார் என்பதைக் கண் டோம். அப்படி ஒவை ஒட்டுவதற்கு வேறு மெய்யைக் கொள்ளாமல் தகரத்தைக் கொண்டதற்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா?* தமிழ் வேதமாகிய இதைத் தொடங்குகையில் தமிழ்ப் பண்பையும் வேதப் பண்பையும் ஒன்று படுத்திப் பாடத் திருவுள்ளங் கொண்
- தசுரம் என்பது தகராகாசத்தைக் குறிப்பது. தகராகாசத்தில்
வன் நடமிடுகிறான். ஆதலின் தகரத்தோடு சார்த்தினார் என்று சிலர் கூறுவ துண்டு. 'மறையவர் குலத்து மாதவப் பயனாய் அவதரித்த கௌணியர் இலக மாய காழிப் பிரானார் காயத்திரிப் பிரணவப் பிரதமாட்சரத்தைத் தமது திவ்ய சூக்தியின் தொடக்கத்தின் மங்கலமாக அமைத்தருளினார்' என்பர் டாக்டர் வி வி. ரமண சாஸ்திரிகள் (திருமந்திரம், பாயிர உரை )