12 உள்ளம் கவர் கள்வன் டார் ஞானசம்பந்தர். தமிழ் என்ற பெயரே த என்பதை முதலாக உடையது. இலக்கணத்தின்படி த் என்பது தான் முதல் எழுத்து.மெய்யை முதலாகக் கொண்டது தமிழ் என்ற சொல். ஆகவே தமிழின் முதலாகிய த் என்பதன் மேல் வேதத்தின் முதலாகிய ஓவை ஏற்றிச் சொன்னார். தமிழ் மொழியில் வேதக் கருத்தை அமைத்துச் சொல்ல வந்த பெருமான் அதற்கு அறிகுறியாக எடுத்த எடுப்பில் முதல் எழுத்தில் அந்தத் தன்மை புலப்படும்படி தமிழ் என்பதன் முதல் எழுத்தையும், வேதத்தின் முதலெழுத் தையும்தோ என வைத்தார் என்று சொல்வதும் பொருத் தம் அல்லவா? தமிழிலே வேதக் கருத்தைச் சொல்ல வந்த எழுதும் மறையாகிய தேவாரம் இறைவனுடைய திருச் செவிக்கண் சார்த்தத் தகுவது. அதனைப் பாடும் ஆற்றலைத் தந்தவர் இறைவனின்றும் வேறல்லாத அம்பிகை. அவ்வம்பிகை யின் வாம பாகத்தின் பகுதியாகிய திருச்செவியில் வெள் ளைத்தோடு உண்டு. அந்தத் தோடு இசை பாடுவார்க்குரிய வீடு. தமிழ் எழுதும் ஒலையாலானது என்னும் இத்தகைய நினைவுகளை யெல்லாம் தோற்றச் செய்வது தோடுடைய செவியன்' என்னும் தொடர். தோடுடைய செவியனாக உள்ளவன் தோணியப்பனா கிய இறைவன். இறைவன் குணங்குறி கடந்த தன் நிலை யில் இருந்தால் அவனுடைய திருவருளை யாரும் பெற முடியாது. அவன் ஆருயிர்களிடத்தில் திருவருள் பூண்ட வனாதலின் உருவமுடையவனாக எழுந்தருள்கிறான். சிவமும் சக்தியும் ஒன்றுபட்டு இருந்தால் உயிர்களுக்குப் பயன்
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/21
Appearance