உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் கவர் கள்வன் 13: இல்லை. இறைவனிடம் உள்ள அருள் வெளிப்பட வேண் டும்; இல்லையானால் இறைவனுக்கே வேலை இல்லை. "சிவமெனும்பொருளும் ஆதி சக்தியொடு சேரின் எத்தொழிலும் வல்லதாம்; அவன்பிரிந்திடிஷன் இயங்கு தற்கும் அரிதாம்" என்பது சௌந்தரிய லகரி. ஆதலின் அருள் வெளிப் பாட்டையே இறைவன் மாதிருக்கும் பாதியனாக நின்ற திருக்கோலம் காட்டுகிறது; தோடுடைய செவியனாகுந் திருக்கோலமும் அதுதான்.அருள் வெளிப்பாட்டின் முதல் தோற்றம் அது. அதன்பின் தனித் தனியே இறைவனும் இறைவியுமாக விடையின்மேல் எழுந்தளுகிறார்கள். அப்படி வருவது அடியார்களுக்கு அருள்புரிவதன் பொருட்டே யாகும். திருஞான சம்பந்தப் பெருமானுக்கு அருள் புரிந்த போதும். "பொன்மலைவல் லியுந்தாமும் பொருவிடைமேல் எழுத்தருளி" வந்ததாகச் சேக்கிழார் சொல்கிறார். அடியாரைக் காக்கும் பொருட்டு அருளைத் தாங்கி நிற்கும் பெருமானுக்கு அருள் மிகுதியானால் அடியார்கள் அவனிடம் வராவிட்டாலும் அவன் அவர்களிடம் எழுந் தருள்வான். அதற்கு ஏற்றபடி அவனுக்கு விடை வாகன மாக இருக்கிறது. அறமே விடையாக இறைவனைத் தாங்கு கிறது. எல்லோருக்கும் இறைவனை வழிபடுவது அறம். அன்பர்களைப் பாதுகாத்தல் இறைவனுக்கு அறம். it தன் கடன் அடியேனையுந் தாங்குதல்' என்பது அப்பர் அருள் மொழி. அடியாரைத் தாங்கும் அறமே இறைவனுக்கு வாகனமாக நிற்கிறது. அதன்மீது இறைவன் எழுந்தருள்கிறான்.