உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 உள்ளம் கவர் கள்வன் யாதொரு செயலும் இன்றி இருக்கும் இறைவனால் நமக்குப் பயன் ஒன்றும் இல்லை. அவன் தன் அருளை வெளிப்படுத்தினால் தான் பயன்.பயனுள்ள இடத்தையே உள்ளம் நாடும்.அருள் வெளிப்படாத பரசிவமாக இருந் தால் உள்ளம் நாடுவதில்லை. இறைவனிடம் அருள் வெளிப் பட்டது என்பதை உணரும்போது உள்ளம் அவன்பால் செல்கிறது. அருள் வெளிப்பாட்டின் முதல் தோற்ற மாகிய தோடுடைய செவியன் என்றாலே உள்ளம் அவ் னிடம் மயங்குகிறது. 'அருள், வெளிப்படுவது மாத்திர மன்று; அடியார்களுக்கு எளிதாய் அவர்களை நாடி வரு வது' என்பதை எண்ணும்போது பின்னும் உள்ளம் ஆர்வத் தோடு நாடுகிறது. தோடுடைய செவியனாக உள்ளம் கவர்ந் தான்; விடையேறிவந்து பின்னும் மிகுதியாக என் உள்ளம் கவர்ந்தான்' என்று இதனையே ஞானசம்பந்தர் சொல்கிறார். உயிர்களையெல்லாம் பாதுகாக்கும் அருளையுடையவன் றைவன்; அதனினும் சிறப்பாக அடியார்களைத் தானே விடையேறி நாடிச் செல்பவன் அவன். அதனையும் விடச் சிறந்த பண்பு ஒன்று அவனிடம் உண்டு. தூவெண் மதி சூடிவரும் தோற்றம் அவனுடைய கருணையின் உச்ச நிலையைக் காட்டுகிறது. அதை அடுத்தபடி நினைக்கிறார். சம்பந்தர். இறைவன் தன் திரு முடியிலே பிறையைச் சூடியிருக் திறான். பிறைக்குக் களங்கம் இல்லை; வெண்மதி அது, சந்திரன் தன் குருவின் மனைவியை விரும்பியவன். சிவபிரானை விலக்கிவிட்டுத் தக்கன் செய்த யாகத்துக்குப் போய்ச் சிவத்துரோகம் செய்தவன். அவனைப் போலவே