உள்ளம் கவர் கள்வன் 15 இந்திரன், சூரியன் முதலிய தேவர்களும் அங்கே சென் றிருந்தார்கள். இறைவன் அவர்களுக்கெல்லாம் உரிய தண்டனையைக் கொடுத்தான். சந்திரனைக் காலாலே தேய்த் தருளினான். மற்றவர்களுக்குக் கிடைத்தது போலவே சந்திரனுக்கும் தண்டனை கிடைத்தாலும், அந்தத் தண்டனை யால் இறைவனுடைய திருவடித் தொடர்பு அவனுக்கு உண்டாயிற்று. கோபத்தால் இறைவன் தேய்த்தாலும் திருவடிக் கீழ்ப்பட்ட சிறப்பால் சந்திரனுக்குத் தவத்தால் கிடைக்கும் பயன் கிடைத்தது. இறைவனுடைய தலைமேல் ஏறிக்கொண்டான். கோபத்தால் குழந்தை கற்கண்டை வீசி ஏறிகிறது. அதை ஒருவன் பொறுக்கித் தின்றால் அதில் இனிப்பு இல்லாமல் போய்விடுமோ? போய்விடுமோ? இறைவ னுடைய திருவடி சம்பந்தம் பெற்றமையால் மதிக்கு இருந்த குறைகள் நீங்கின. என்ன தவறு செய்திருந்தாலும் தன் திருவடியின் தொடர்பு பெற்றால் உயர்ந்த நிலையை அடையலாம் என்ற உண்மையை இதனால் இறைவன் புலப் படுத்தினான். தன்னை அன்பு செய்து வழிபட்டாருக்கு அருள்வதைவிடத் தன்னை அவமதித்தவனுக்கு அருள் செய்வது பெரிய கருணை. இதை நினைக்கும்போது உள்ளம் உருகுகிறது. மதி சூடியாக இறைவன் நின்று, அதனால் தன் சிறந்த கருணையைப் புலப்படுத்தி, அன்பர்களின் உள்ளத்தைக் கவர்கிறான். இறைவன் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டுத் தோடுடைய செவியனாகத் தோற்றுகிறான்; அடியார் களுக்கு அருள் செய்ய விடை யேறி வருகிறான்; அபராதம் செய்தலராயினும் அடியடைந்தால் பழம்பிழை பொறுத்து அருள் செய்ய மதிசூடி வருகிறான்.
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/24
Appearance