உள்ளம் கவர் கள்வன் " கெட்ட எல்லா உயிர்களுக்கும் இறைவன் தந்தை, பக்குவ ஆன்மாக்களுக்கு மாத்திரம் தந்தை, மற்றவர்களுக்குத் தந்தை அல்ல என்று சொல்ல முடியாது. எல்லா உயிர் களுக்கும் தனுகரண புவன போகங்களை உதவி வாழ்ச் செய்கிறான். ஆனால் சில உயிர்களே நன்னெறியில் நின்று அவனை நாடிச் செல்கின்றன. ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் நல்ல பிள்ளைகளுக் குச் சிறப்பான ஆடையணிகளை அணிகிறாள். பிள்ளைகளை ஒறுக்கிறாள். எல்லாப் பிள்ளைகளுக்கும் சோறு ஊட்டுகிறாள். நோயுடைய குழந்தைகளுக்குச் சோறு ஊட்டாமல் மருந்து தருகிறாள். இரவு வந்தால் எல்லரக் குழந்தைகளையும் தாலாட்டித் தூங்கப் பண்ணு கிறாள். உணவு, உடை, அணி ஆகியவற்றில் அந்த அந்தக் குழந்தையின் நிலைக்கு ஏற்றபடி வேறுபாடு காட்டி அர வணைக்கிறாள். ஆனால் உறங்கச் செய்யும்போது இந்த வேறுபாடு இருப்பதில்லை. எல்லோரையும் உறங்கச் செய் கிறாள். குழந்தைகளெல்லாம் உறங்கும்போது தான்மாத் திரம் உறங்காமல் இருக்கிறாள். அப்படியே இறைவன் உயிர்களின் நல்வினை தீவினைகளுக்கு ஏற்றபடி அவ்வுயிர் களுக்குப் போகங்களைக் கூட்டுவிக்கிறான். பிரளய காலத் தில் எல்லோரையும் தன் அடிக்கீழ் அடக்கிக் கொள் கிறான். ஒவ்வொரு பிராணியும் மரிக்கிறது. அதற்குச் சுடுகாடு உண்டு. உடவெடுத்த எல்லா உயிர்களும் ஒருங்கே மரிக்கும் காலம் பிரளயம். அப்போது எல்லா இடமும் மகாமயானம் ஆகிவிடும். அந்த மகா மயானத்தில் எல்லா உயிர்களும் அடங்கி நிற்கும்போது எல்லாவற்றை யும் சுட்டெரித்து நிற்கும் இறைவன், அந்தச் சுட்ட நீற் றைத் தன் திருமேனியிலே பூசிக்கொண்டு ஆடுகிறான். தன் குழந்தைகளுக்குள் வேறுபாடு இன்றி எல்லோரும்
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/25
Appearance