உள்ளம் கவர் கள்வன். தூங்கும்போது தனித்து நின்று களிக்கும் தாய்போல, இறைவன் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறான். தன் குழந்தைகளுக்கு ஓய்வு கொடுத்ததனால் உண்டான் ஆனந் தத்தால் ஆடுகிறான், தன் திருமேனி முழுதும் சுடுகாட் டிலே உள்ள சுட்ட சாம்பலை அணிந்து ஆடுகிறான். எல் லாம் ஒடுங்கின விடத்துத் தான் ஒருவனே சர்வ சக்தி மானாக நின்று நடம் செய்கிறான். எல்லா உயிர்களுக்கும் ஓய்வு தருகின்றானே; அவனுக்கு எத்தனை கருணை. இருக்க வேண்டும்! அதை நினைக்கையில் உள்ளம் நைகிறது. டைய சுடலைப் பொடி பூசி ஆடும் திருக்கோலத்தைக் காட்டி உள்ளம் கவரும் பெருமான் இறைவன். காடு தோடுடைய செவியனாகி, விடை ஏறி, ஓர் தூவெண் மதி சூடி, காடுடைய சுடலைப் பொடி பூசி வரும் பெரு மானது கோலத்தின் உண்மையை நினைக்கும்போது உள்ளம் மயங்கி உருகுகிறது, சம்பந்தப் பெருமானுக்கு. அவனு நடைய பேரருட் சிறப்பையே இந்த நிலைகள் யாவும் காட்டுவ தனால் அத்தகைய கவர்ச்சி உண்டாகிறது. ஆதலின், ‘என் உள்ளம் கவர் கள்வன்' என்றார். கள்வன் என்று இறைவனைக் கூறுகிறார் சம்பந்தர். யஜூர் வேதத்தில் இறைவனுடைய புகழைக் கூறுவதும் பஞ்சாட்சரத்தைத் தன் நடுவிலே பெற்றதுமாகிய ருத்திரம் இறைவனைக் கள்வர் தலைவனென்று கூறும். கள்வன் பிறர் அறியாவாறு தன் தொழிலைப் புரிபவன்; தன்னை மறைத் துக் கொள்பவன். இறைவனும் சம்பந்தப் பெருமானை ஆட்கொண்டது பிறர் அறியா வகையில்தான். அவன் உருவைப் பிறர் காணல் இயலாது. ஒரு பொருளை உடை யாரிடம் முன்னே சொல்லாமலே அப் பொருளைக் கவர்வது 2
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/26
Appearance