உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் கவர் கள்வன். 19 யிருந்தான். அதனால் இத் தலத்துக்குத் தோணிபுரம் என்ற திருநாமமும், இறைவனுக்குத் தோணியப்பர் என்ற திருநாமமும் உண்டாயின. பிரளயம் நீங்கினபின் இறை வன் பிரமனைத் திருமால் மூலம் உண்டாக்கினான், பிரமன் இத்தலத்துக்கு வந்து இறைவனை வணங்கி அருள்பெற்றுத் தன் படைப்பினைத் தொடங்கினான். இது இத் தலத்து . வரலாறு. திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றின வுடனே, "எப்படி உலகத்தைப் படைப்பது? என்ற கவலை பிரம னுக்கு உண்டாயிற்று. உடனே தோணிபுரம் வந்தான். ஆதலின் 'ஏடுடைய மலரான்' என்று குறிப்பித்தார். மிகப் பழங்காலத்துச் செய்தி இது; ஆதலின் முனை நாள் என்றார். முன்னை என்பது முனை என இடைக்குறையாக நின்றது. இறைவன் திருமுன்னர் விழுந்து வணங்கியதைப் பணிந்து என்றும், இறைவன் புகழை யெல்லாம் கூறித் துதித்ததை ஏத்த என்றும் புலப்படுத்தினார். இறைவன், 'இனி நீ நன்றாகப் படைப்புத் தொழிலைச் செய்து வருக" என்று ஆணை தந்ததையே, 'அருள் செய்த' என்றார். எல்லா இடங்களும் அழிந்த போதும் தான் மட்டும் அழியாமல் இருந்த இறுதி இடமே,எல்லா இடங்களும் தோற்றும் போது முதலில் எண்ணுவதற் குரியது. எல்லாப் படைப்புக்கும். மூலமான அருளைப் பெற வைத்த பெருமை சிறந்ததாதலின் அதனை நினைந்து பீடுடைய பிரமாபுரம் என்றார். பிரமபுரம் என்பதே இசைப் பாவுக்கு ஏற்றபடி பிரமாபுரம் என நீண்டது. சம்பந்தப் பெருமானுடைய பாட்டினால் பிரமபுரம் தன் பெயரிலும் புகழிலும் நீண்டது. மேவுதல் என்பதற்கு விரும்புதல் என்றும் தங்குதல் என்றும் இரு பொருள் உண்டு. இங்கே அவ்விரண்டையும் சேர்த்து விரும்பித் தங்கிய என்று பொருள் கொள்ளுதல்