20 உள்ளம் கவர் கள்வன் சிறப்பாகும். பெருமான் என்பது பெம்மான் என நின்றது. இவன் என்பது அணிமைச் சுட்டு. இறைவனை அறியாத வர்கள் யாவரும் அவன் மிகமிக அணிமையில் இருந்தாலும் சேய்மையிலுள்ளவனாகவே கருதி அவன் என்பார்கள். வேதம் முதலிய நூல்களும் அது என்றே குறிக்கும். ஆனால் இறைவனை உணர்ந்து தம் உள்ளத்தை அவனுக்கே அளித்து அவனைத் தம்முள்ளே உணரும் ஞானப்பிரான் ஆதலின் அவ்வணிமை தோன்ற இவன் என்றார். நெஞ் சுக்கு அணியதாக இருக்கும் பொருளை இகரச் சுட்டாலே சுட்டுதல் மரபு.
ன்று,ஏ இரண்டும் அசை நிலைகள். தோடுடைய செவியன்விடை ஏறிஓர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப்பொடிபூசிஎன் உள்ளம் கவர்கள்வன் ஏருடைய மலரான்முனை நாள்பணிந்து ஏத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேலிய பெம்மான் இவன்அன்றே. [தோட்டை உடைய செவியை உடையவனாகி,இடப வாகனத் தின்மேல் ஏறி, தூய வெள்ளிய பிறையைத் தலையில் வைத்து, சுடுகாடு பெற்ற சுடுதலையுடைய திருநீற்றைப் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் (யாரெனில்), இதழ்களையுடைய வெண்டாமரை மலரிலே தோற்றிய பிரமதேவன் முன் காலத்தில் வழிபட்டுத் துதி செய்ய, அவனுக்குத் திருவருள் பாலித்த சிறப்பை உடைய பிரமபுரத்தின்கண் விரும்பி எழுந்தருளிய பெருமானாகிய இவன். .
- 'இவன் என்றார். கருத்துக்கண் அணிமையான் ' (புறநானூறு. 72:2,
யுழைய உரை.).