.: உள்ளம் கவர் கள்வன். . 21 செவியன் என்பது குறிப்புவினைமுற்று எச்சம். மதி என்பது பெரும்பாலும் முழு மதிக்கு வருவது. இங்கே தூவெண் மதி என்றதனாற் பிறையாயிற்று, சூடுதல் தலையில் அணிதல். சுடலை- சுடுதல்; காடுடைய சுடலை -காடு என்ற பெயரை உடைய சுடலை, காட்டின் தன்மையை உடைய சுடலை என்றும் பொருள் கூறலாம். பிரமாபுரம்: செய்யுள் விகாரம்.] உலகின் தோற்றத்துக்கு மூலமான அருளை. இதை வன் வழங்கிய இடம் பிரமபுரம். அத்தலமே தமிழ் மறை யாகிய தேவாரம் தொடங்குவதற்கும் இடமாயிற்று. இதை வன் திருவருள் துணைக்கொண்டு வேதத்தை எப்போதும் நான்முகன் ஓதிப் பணிபுரியும் இடத்தில் தமிழ் வேதத் தைப் பாடிப் பணிபுரியும் சம்பந்தப்பிரான் அருள்பெற்றார். . தோடுடைய செவியன் என்பதனால் உலகுயிர்த் தோற்றங்களுக்கு மூலமாகிய அருள் வெளிப்பாட்டைக் குறித்தார். இது படைப்பைப் புலப்படுத்தியது. விடை யேறுதலும் மதி சூடுதலும் அறம், மறம் உடையாருக்கு முறையே இன்ப துன்ப நுகர்ச்சி தந்து பாதுகாக்கும் காப் புத் தொழிலைப் புலப்படுத்தும். சுடலைப் பொடி பூசியது சங்காரத்தைக் குறிப்பிக்கும். கவர் கள்வன் என்பது மறைப்பாகிய திரோதத்தைக் குறிக்கும். ஏத்த அருள் செய்த என்பது அநுக்கிரகத்தைக் குறிக்கும். இவ்வாறு இறைவனுக்குரியனவாகிய படைப்பு, அளிப்பு, அழிப்பு, மறைப்பு, அருளல் என்னும் ஐவகைத் தொழில்களும் குறிப்பாக இப் பாடலில் சொல்லப் பெற்றன. இது தேவாரத்தில் முதல் திருமுறையில் முதல் பதிகத்தின் முதற் பாட்டு. அந்தப் பாட்டில் தமிழுக்கே உரிய காதல் துறையும் குறிப்பாக அமைந்துள்ளது. பாட்டுடைத் தலைவனுடைய
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/30
Appearance