உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 உள்ளம் கவர் கள்வன் பெயரைக் கூறியமையால் இது புறத்துறையைச் சார்ந்தது. பாடாண்திணையில் கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் என்னும் துறையின்பாற் படும். தலைவ னுடைய பிரிவால் வேறுபட்ட தலைவியை நோக்கி, "நின் உள்ளம் கவர்ந்தவன் யார்?" என்று தோழி கேட்க, அவ ளுக்குத் தலைவி கூறும் கூற்றாக அமைந்தது இந்தப் பாட்டு. இறைவனாகிய காதலனிடம் ஆன்மாவாகிய காதவி கொண்ட காதலைக் குறிப்பது இது இந்தக் காதற் செய்தி இந்தப் பாட்டில் வெளிப்படை யாக இல்லாவிட்டாலும் இந்தப் பதிகம் முழுவதும் இந்தத் தெய்வக் காதல் பற்றிய பாடல்களால் ஆனது என்பதை இப்பதிகத்திலுள்ள வேறு இரண்டு பாடல்கள் தெளிவாக உணர்த்தும். நீர்யரந்தநிமிர் புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி ஏர்பரந்தஇன வெள்வளை சோரஎன் ம உள்ளங் கவர்கள்வன் றைக லந்தஒலி பாடலோ டாடலர் ஆகி மழுஏந்தி (3) இறைகலந்தஇன வெள்வளை சோரஎன் உள்ளங் கவர்கள்வன் என வரும் பகுதிகளால் இது புலப்படும். (6) தமிழாற் பாடல் பாடத் தொடங்கும் சம்பந்தப் பிள்ளையார் தமிழுக்கே சிறப்பாகச் சொல்லும் காதல் துறையில் தம் முதற் பதிகத்தை அமைத்தது பொருத்தமே. யாகும். அவர் தமிழ் விரகர் அல்லவா?