உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று நிலை உலகத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் தொழில் களை உடையவன் இறைவன். அந்த மூன்று தொழில்களை யும் நடத்துவதற்கு மூன்று மூர்த்தியாகி இருக்கின்றான். எல்லாப் பொருள்களும் ஒடுங்கும் காலத்தில் தான் ஒருவனேயாகி நிற்கிறான். தத்துவங்கள் ஒன்றின் ஒன்று தோன்றி விரிந்து கொண்டே வரும். அப்படியே ஒடுங்கும் போது ஒன்றின் ஒன்று அடங்கிக் கொண்டே வரும். தோற்றமும் ஒடுக்கமும் இல்லாதவன் இறைவன் ஒரு வனே அவனே எல்லாப் பொருளும் ஒடுங்கின இடத்தி லும் தான் ஒடுங்காமல் எல்லாவற்றின் முடிவையும் காணும் ஒருவனாக விளங்குகிறான். அதனால் எல்லாப் பொருள் களுக்கும் ஈறாக, எல்லையாக, அந்தமாக நிற்பவன் இறை வன்தான். ஈறும் முதலும் எவன் எல்லாவற்றிற்கும் இறுதியிலே நிற்கிறானோ, அவனே எல்லாவற்றிற்கும் முதலிலே இருப்பவனும் ஆவான். ஆதி அந்தம் என்ற வேறுபாடு இறைவனளவில் இல்லை. ஆயினும் பிறவற்றை நோக்கும் போது, அவை யெல்லாம் ஒடுங்கும்போது அவற்றின் இறுதியைக் கண்டு ஈற்றிலே நிற்பவனாதலின், எல்லாவற்றிற்கும் ஈறான பொருள் அவனே ஆகிறான். மீட்டும் எல்லாத் தத்துவங் களும் தோற்றும்போது அவன் எல்லாவற்றையும் தோற்றுவித்தலின் அவனே முதல்வனாக நிற்கிறான்.