உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 உள்ளம் கவர் கள்வன் சேர்ந்து ஆண் வண்டு நுகரும் இன்பத்தை நினைத்தார். 'இத்தகைய இன்பத்தை நாம் பெறவில்லையே! நம்மை ஆட் கொள்ள வேண்டிய காதலன் நம்மைப் பிரிந்திருக்கிறானே!" என்ற விரகம் மேலெழுந்தது. இனியும் பிரிவைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாத நிலை வந்துவிட்டது. எப்படி யாவது தம் விரக நிலையைத் தம் தலைவனாகிய தோணிபுரேச னுக்குத் தெரிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. யாரிடம் சொல்லி அனுப்புவது? எந்த வண்டின் இன்னிசை ஒலி இந்த எண்ணத்தை எழுப்பியதோ, அந்த வண்டையே தூதாக அனுப்பலாமே என்று தோன்றியது. ஆம்; அது சரியான வழி" என்று உறுதிப்படுத்திக் கொண்டார். வண்டைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார். பிரிவுத் துன்பத்தால் அலமரும் காதலிமார் இப்படிக் கண்ட கண்ட பொருளையெல்லாம் பார்த்துப் பேசுவது இயற்கை. மனத்திலே பொங்கி வரும் துயரத்தை ஆற்றிக் கொள்ள இது ஒரு வழி. து ஒரு வழி. காமம் மிக்க காமம் மிக்க கழிபடர் கிளவி என்று இத்தகைய பேச்சைச் சொல்வார்கள். பார்த்து ஞானசம்பந்த நாயகியார் பேசுகிறார். வண்டைப் "ஏ வண்டு ராஜாவே!" என்று அழைத்தார். அது இப்போது ராஜ போகத்தில் அல்லவா இருக்கிறது? வண்டு, மதுகரம், அரி, பிரமரம் என்று வண்டுக்கு எத்தனையோ பேர் உண்டு. அவற்றையெல்லாம் சொல்லாமல், 'அளி யரசே!" என்று விளித்தார். அளி என்பதற்கு வண்டென் றும் அன்பென்றும் பொருள் உண்டு. "நீ வண்டு ராஜா தான். உன்னுடைய நாயகியோடு இன்புறுகிறாயே! இத் தகைய இன்பத்தை மற்றவர்களும் பெறும்படி வைக்க. வேண்டாமா? பசித்துச் சாப்பிட்டவன் மற்றவர் பசியை உணர்ந்து உணவு வழங்குவது போல, ஒன்றுபட்ட வாழ்வு