வண்டுவிடு தூது. வாழும் உனக்குத்தானே அந்த அருமை தெரியும்? நீ தானே எனக்கும் அந்த வாழ்வை வழங்க வேண்டும்? அன்புக்கு அரசன் என்று சொல்லும்படியாக அல்லவா உன் பெயர் இருக்கிறது? வண்டு ராஜாவாக இருப்பதனால் மாத்திரம் அன்றி அன்பிலும் அரசனாக இருப்பாயானால் அளியரசு என்னும் பெயருக்கு இரட்டிப்புப் பொருத்தம் அமையுமே! இவற்றையெல்லாம் நினைத்துப் பார்' என்று பலபல எண்ணங்களையும் எண்ணி அதன் பயனாகச் சுருக்க மாய், "அளியரசே!" என்று விளித்தார். வண்தரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும் ஒண்தரங்க இசைபாடும் அளியரசே!: மேலே வண்டாசினிடம் தமக்கு இன்னது செய்ய வேண்டு மென்று பணிவுடன் சொல்கிறார் ஞானசம்பந்த நாயகியார். நீ அதிக முயற்சி செய்ய வேண்டாம். உடலுக்குச் சிரமத்தைக் கொடுக்கும் பெரிய காரியங்களைச் செய்ய ஒரு வார்த்தை சொன்னால் போதும்." வேண்டாம். "ஒரு வார்த்தையா?" 'ஆம்; ஒரு வார்த்தையை ஒரு முறை சொன்னால் போதும்." எப்படிச் சொல்ல வேண்டும்?" "பரிவுடன் சொல்ல வேண்டும். என் நிலைக்கு இரங்கி, என் காரியம் நிறைவேற வேண்டும் என்ற பரிவோடு ஒரு கால் பகர்ந்தால் போதும்." "உன் நிலை என்ன?"
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/62
Appearance