உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 உள்ளம் கவர் கள்வன் "என் நாயகன் என்னைப் பிரிந்து நிற்கிறான். அவனு டைய பிரிவுத் துன்பத்தால் நான் அடைந்துள்ள வாட்டம் சிறிதன்று. இந்த நிலைமையை நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை.: நீயே பார். பார்த்து விட்டு, என்பால் பரிந்து என் நிலைமையை ஒருகால் பகர். "யாருக்குப் பகரவேண்டும்?" "என் காதலருக்குத்தான். அவர் யார்? எங்கே இருக்கிறார்?' "அவர் இருக்குமிடத்தைக் கஷ்டப்பட்டுத் தேட வேண்டும் என்பதில்லை. குன்றின் மேலிட்ட பெருவிளக்கை அடையாளம் வைத்துக் கொண்டே சென்றால் குன்றின் அடிவாரத்தை அடையலாம். அதுபோல என் காதலர் உள்ள இடத்தை அடைய வேண்டுமானால் அப்படி ஓர் அடையாளம் உண்டு. அவர் திருமுடிமேல் பிறையை, சந்திர துண்டத்தை, வைத்திருக்கிறார். அதுவே அடையாளமாக அதன் ஒளியைப் பற்றிக் கொண்டு நடந்தால் இருக்குமிடத்தை அடையலாம்; அவர் எழுந்தருளியிருக் கும் தோணிபுரத்தைச் சேரலாம். அவர் "பலர் இருக்குமிடத்தில் அவரை எப்படி அடையா ளம் கண்டுபிடிப்பேன் ? நெடுந்தூரத்தில் முடியிலுள்ள நிலாத் தெரியும். அருகில் சென்று அடி அடைந்தால் அது தெரியாதே ! அங்கே போனால் தெரிந்துகொள்ள அடையாளம் உண்டா?" ஆகா! தூரத்திலிருந்து வழி கண்டு செல்ல மதித் துண்டம் உதவுகிறது. அருகிலே சென்றாலும் என் காத லரை எளிதிலே அடையாளம் கண்டு கொள்ளலாம். எல் வோரும் இன்ப மலர் மாலையை அணிந்திருப்பார்கள்.