உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 உள்ளங் கவர் கள்வன் இது வண்டுவிடு தூது. வண் தரங்கத்தையுடைய புனல்; தரங்கம் - அலை. புனலிலே பூத்த கமலம். பெடையினொடும் மாந்தி இசை பாடும், மதியத் துண் டர் - சந்திரனுடைய துண்டத்தை அணிந்தவர். 'நிலாத்திங்கள் துண்டம்" என்று பிறையைக் கூறுவதுண்டு. அங்கம் - எலும்பு. பண்டரங்கன்: பாண்டரங்கன் என்பதன் விகாரம். பாண்ட ரங்கம் என்பது,சிவபிரான் முப்புரத்தை எரித்து எங்கும் நீறு பரவிய இடமே அரங்கமாக ஆடிய கூத்து. "மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து பண்டரங்கம் ஆடுங்கால்" என்பது கலித்தொகை (கடவுள் வணக்கம்)*] இறைவனைக் காதலனாகவும் தம்மைக் காதலியாகவும் வைத்துத் திருஞானசம்பந்தர் பாடிய பல பாடல்களுள் இது ஒன்று.

  • பாண்டரங்கக் கூத்தைப் பற்றிய விரிவான செய்திகன், பீடியும்

களிறும்" என்ற புத்தகத்தில் காணலாம்.