குணமும் கோலமும் அணுவுக்கு அணுவானவன், மகத்துக்கு மகத்தான வன்" என்று வேதம் இறைவனைப் பாராட்டுகிறது. நுட் பத்திலும் நுட்பமான பொருளாகிப் பெரியவற்றிலும் பெரியதாகி இருக்கும் அவனை, நுண்ணியான் மிகப்பெரியான் என்று புகழத் தொடங்குகிறார் சம்பந்தர். கடவுளை எல்லோரும் நினைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அன்பர்கள் மாத்திரம் நினைக்கிறார்கள்; புகழ் கிறார்கள். ஆனால் மனிதர்கள் கடவுளைப் பற்றிப் பேசுவ துண்டு. துன்பம் வந்தால் கடவுள் நாமத்தை உச்சரிப் பார்கள். கண்ணன் குந்திதேவியிடம், "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டானாம். "தினந்தோறும் எனக்கு ஏதாவது துன்பம் வரவேண்டும் " என்று அவள் வேண்டிக் கொண்டாள். "ஏன் அப்படிக் கேட்கிறாய்? என்றான் கண்ணன். "அப்போதுதான் உன்னை நினைக்கத் தோன்றும்" என்று அவள் சொன்னாளாம். இன்பத்தை நுகரும்போது மக்கள் இறைவனை எண் ணுவதில்லை. துன்பம் வந்தால்," கடவுளே! கடவுளே!' என்று கதறுவார்கள். ஆகையால் சம்பந்தர், என்கிறார். தோயுளார் வாயுளான் ஆரம்பத்தில் ஒன்றுக்கொன்று மாறான, நுண்மையை யும் பெருமையையும் சேர்த்துச் சொன்னார். மேலும் அப்
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/66
Appearance