58 உள்ளம் கவர் கள்வன் படி உள்ள இரட்டைகளாகத் தொடுத்துச் சொல்கிறார். 'அவன் அன்பர்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறவன்; அல்லாதாருக்குக் கொடியவனாக இருக்கிறவன். தண் ணீரிலே குளிர்ச்சியாக இருக்கிறவன் ; சூரியனிடத்தில் வெப்பமாய் இருக்கிறவன்' என்ற எண்ணத்தால், தண்ணியான் வெம்மையான் என்று பாடுகிறார். எல்லோருக்கும் மேலே நிற்கிறவன் அவன்; எல்லோ ருக்கும் உள்ளே இருப்பவன் அவன். எல்லோரையும் தானின் கீழே அடக்கி எல்லோர் தலையையும் தாழ்த்தி மேலே நிற்கிறவன்; எல்லோரிடத்திலும் அடங்கி மனத் துக்குள்ளே இருக்கிறவன். அன்பர்கள் தலையாலேவணங் கும்படி இருப்பவன்; அவர்கள் உள்ளத்தாலே தியானிக் கும்படி மனத்தில் இருப்பவன். இப்படியெல்லாம் தெளித்து கொள்ளும்படி, என்கிறார். நம் தலைமேலான் மனத்துளான் . எதற்கும் அசையாதவன். எதனாலும் தளர்ச்சி இவ் லாதவன். பகைவரால் தளராத திண்மையை உடையவன். காலத்தால் நெகிழாத உரம் உடையவன். வலிய பொருள் களுக்கெல்லாம் வலிய பொருளானவன். யாவும் அழிந்த காலத்தும் தான் அழியாத திண்மையை உடையவன். இவ்வளவையும் உள்ளடக்கி, என்கிறார். திண்ணியான் இப்படி யெல்லாம் இருக்கும் சிவபிரான் திருச் செங் காட்டங்குடியிலுள்ள கணபதீச்சரம் என்ற திருக்கோயி லில் எழுந்தருளியிருக்கிறான்.
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/67
Appearance