உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமும் கோலமும் 59 செங்காட்டங் குடியான். கணபதிச் சரத்தானே. அவன் தன்மையைச் சொல்லிவிட்டார். கொஞ்சம் அடையாளம் சொல்ல வேண்டாமா? அவன் தலை சடைத் தலை. செக்கச் சிவந்த சடையுடையவன் அவன். அதில் கண்ணியைப்போலச் சந்திரனைச் சூடியிருக்கிறான். அது அவனுக்கே உரிய அடையாளம். "அவன் அணிந்த கண்ணி உடம்போடு ஒட்டாததுதானே? உடம்போடு ஒட் டிய அடையாளம் ஏதாவது உண்டா?" என்றால், வேறு யாருக்கும் இல்லாத தனி அடையாளம் உண்டு. அவன் நெற்றியிலே கண் படைத்தவன்; கண்ணையுடைய நுதலைக் கொண்டவன்; கண்ணுகலான். இவ்வாறு குணத்தையும், குடியிருக்கும் இடத்தை யும், கொண்ட கோலத்தையும் ஞானசம்பந்தர் பாடுகிறார். நுண்ணியான் மிகப்பெரியான் நோயுளார் வாயுளான் தண்ணியான் வெய்யான் நம் தலைமேலான் மனத்துளான் திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக் கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே. [நுட்பமானவன்; மிகப்பெரியவன்; துன்பம் உடையவர்கள் வாயில் இருப்பவன்; குளிர்ச்சியுடையவன்; வெப்பமுடைய வன்; நம்முடைய தலையின்மேல் இருப்பவன்; மனத்தில் இருப் பவன்; திண்மையை உடையவன்; திருச்செங்காட்டங் குடியில் இருப்பவன்; சிவந்த சடையில் மதியாகிய கண்ணியைப் -* "மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்" என்பது அப்பர் வாய் மொழி.