இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60 உள்ளம் கவர் கள்வன் பூண்டவன்; கண்ணையுடைய நெற்றியை உடையவன்; கணபதீச் சரத்தில் உள்ளவன். 'கணபதீச்சரத்தான் என்பதை எழுவாயாக்கி நுண்ணியான் முதலியவற்றைப் பயனிலையாக்கி வாக்கியத்தை முடிக்கலாம். நுண்ணியானும் பெரியானும் ஆக இருப்பவன் கணபதீச்சரத்தில் உள்ளான் என்று முடிப்பதும் பொருந்தும். அப்போது கணப தீச்சரத்தான் என்பதைக் குறிப்புவினை முற்றாகக் வேண்டும். கொள்ள திருச்செங்காட்டங்குடி என்பது ஊரின் பெயர்; கணபதீச் சரம் என்பது ஆலயத்தின் பெயர். இப்படியே ஊரின் பேர் வேறாகவும், ஆலயத்தின் பெயர் வேறாகவும் சில இடங்களில் இருக்கும். உதாரணம்: கருவூர் என்பது ஊரின் பெயர்; ஆநிலை என்பது திருக்கோயிற் பெயர்.]