இறுதித் துணை எப்படி இருக்கிறது அவருக்கு? "நேற்றுக்கூட நாம் கூப்பிட்டால் ஏன் என்று கேட் டார். இன்றைக்கு என்ன சொன்னாலும் கேட்கவில்லை. காது அடைத்து விட்டது." கண் தெரிகிறதா?" ?* அதுதான் நாலு நாளுக்கு முன்பே போய் விட்டதே. கண்ணைத் திறந்து பார்க்கிறதே இல்லை." கைகால் சுவாதீனம் எப்படி இருக்கிறது "போட்டது போட்டபடியே கிடக்கிறார். எறும்பு மொய்த்தாலும் தெரியவில்லை; ஈ மொய்த்தாலும் தெரிய வில்லை." இவ்வாறு நடக்கும் பேச்சை எத்தனையோ முறை நாம் கேட்டிருக்கிறோம். உடம்பிலே உயிர் இருந்து வாழு. மட்டும் மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்ற ஐந்து பொறிகளும் வேலை செய்கின்றன. உயிர் உடம்பை விட் டுப் போவதற்கு முன்பே இவை ஒவ்வொன்றாக அடைத்து விடுகின்றன. பொறியினால் நுகரும் நுகர்ச்சிகளைப் புலன் என்று சொல்வார்கள். கண்ணாகிய பொறியினால் நுகரப் படும் புலன் உருவம்.. காதால் உணரப் பெறுவது ஒலி. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்துமே ஐம் புலன்களாகும்; இவற்றைப் பஞ்ச தன்மாத்திரைகள் என்று சொல்வர் வடமொழியாளர். ஐம்பொறிகளும் ஐம்புலன்களைத் தெளிவாக உணரும் உணர்ச்சி, உடம்பு
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/70
Appearance